மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதள தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன்போது தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் யூட்யூப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைத்தளத் தொடர் ‘குத்துக்கு பத்து’. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ‘நவம்பர் ஸ்டோரீஸ்’ புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் செந்தில் படத்தொகுப்பை கவனிக்க, மதன் குமார் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த தொடரை டி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ஏ. கே. வி. துரை தயாரித்திருக்கிறார்.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதள தொடரை கண்டு ரசித்த திரையுலக பிரபலங்கள் பலரும் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினரின் புதிய முயற்சியை பாராட்டினர். இந்த வலைதள தொடரினை பிரபலப்படுத்துவதற்காக இந்த குழுவினர் பயன்படுத்திய ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு ’ என்ற உத்தியையும் வெகுவாக சிலாகித்துப் பாராட்டினர். ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதியன்று வெளியாகிறது.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைத்தளத் தொடரைத் தொடர்ந்து, நக்கலைட்ஸ் என்ற உள்ளுர் திறமையாளர்களுடன் இணைந்து உருவான ‘அம்முச்சி 2’ என்ற வலைத்தளத் தொடரும் ஆஹா ஒரிஜினல் படைப்பாக வெளியாகவிருக்கிறது.

தமிழ் பார்வையாளர்களை புத்தம் புது நிகழ்ச்சிகளால் அசத்தி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில், ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்கள் வெளியானது. ஆஹா ஒரிஜினல் படைப்பான‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற திரைப்படமும் வெளியானது. இதற்கு பார்வையாளர்களிடையே பெருகி வரும் பேராதரவால் விரைவில் திரையரங்கில் வெளியான பின் ஜீ வி பிரகாஷ்குமாரின் ‘ஐங்கரன்’ திரைப்படத்தையும் ‘ஆஹா டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here