Director Kiran Raj K’s upcoming movie ‘Charlie’ starring Rakshit Shetty and a Labrador dog has already created good sensation. The movie revolves around the relationship and bonding between the protagonist Dharma and a dog named ‘Charlie’ that is laced with adventure and entertainment. Actor Rakshit Shetty, who was last seen in the movie ‘Avane Sriman Narayana’ has produced this movie and played the lead role as well. While the movie is scheduled for worldwide theatrical release on June 10, 2022, the entire team was present for the Pre-Release event to promote the Tamil version in Chennai.
Here are some of the excerpts from the event.
B Sakthivelan of Sakthi Film Factory said, “Karthik Subbaraj screened this movie and asked if I could release it. I would like to express my views that the pet dog that has acted in the movie deserves ‘Best Animal Creature’ for its beautiful work. I am still in awe of this movie, and can’t imagine, how the makers have narrated such a beautiful story. I am confident that 777 Charlie is going to be a cherry-pick for kids and pet lovers.”
Actor Raj B Shetty said, “I have played the role of veterinary doctor in this movie. I wanted to be a part of this ambitious project. I would have never come up with the idea of producing this movie, but Rakshit has made it. It is such a challenging project, and it will definitely offer a wonderful experience to the audiences in the theaters. I thank filmmaker Kiran Raj, Rakshit Shetty for making me a part of this project. I thank Stone Bench for releasing this movie.”
Stone Bench Karthikeyan said, “We were stunned watching this movie. Myself and Karthik Subbaraj were into deep discussions as we were awestruck with this mind blowing project. We weren’t able to figure out how they made such a project with so much of perfection. Only the ones with insatiable passion for cinema will be motivated to make such movies. Soon after watching this movie, we decided to release it. We felt excited to be a part of great movie. I wish and congratulate Rakshit Shetty and director Kiran for their wonderful work. It’s really unimaginable and surprising to see the dog rendering a wonderful performance. The dubbing crew has taken scrutinizing efforts in making this project look like a direct Tamil movie. I thank SJ Suryah sir for his earnest support. I wish great success to 777 Charlie.”
Actress Sangeetha said, “Not all actors are blessed to get a chance to work with pet dogs, and it has been an unforgettable experience for me. I am proud for having been a part of this movie. The director, producer, editor, Music director and almost everyone in the movie have delivered an impeccable performance. I request everyone to support this movie.”
Director Kiran Raj said, “I am a great pet lover and hence wanted to make such a movie. I clearly knew that the movie will throw lots of challenges even before kick-starting the project. However, we were still confident that we can pull it off efficiently. Soon after listening to the script, Rakshit Shetty gave confidence that we can get it materialized. He wasn’t bothered about the budget, and didn’t want to compromise anywhere. Actors Rakshit, Sangeetha and everyone from the team have given 3 years of dedication towards this project. Just as in Kannada industry, we wanted this movie to get released through the proficient teams in other regional languages. We are happy that Karthik Subbaraj showed interest in releasing this movie. The Tamil dubbing crew has been extraordinary and the dubbing artist Sekar has spoken better and best than the hero himself. The clarity I had upon this project was same with the producers as well. I am sure, none will be judging this movie as a dubbed one, and it will look exactly like a direct Tamil movie. We were in deep pursuit of dog for the role of ‘Charlie’ and got the perfect one after prolonged search. I request everyone to support this movie.”
Director-Producer Karthik Subbaraj said, “The movie industry is reviving after the long shut down of Corona. I have already shared a close bonding with Kannada movie industry. I have already watched the movies of Rakshit Shetty earlier. I watched the 15 minutes of this movie without any expectations. I thought it would be a gangster movie, but was shocked and surprised to see a different premise out there. I wanted to be a part of this great project, and hence decided to release in Tamil. I was confident about this movie success. It’s unbelievable that 777 Charlie marks the directorial debut of Kiran Raj. It’s a great challenge to make a dog act. We had tried the same in our movie Iraivi, and later deleted those scenes, as we weren’t able to get the final output perfectly. This story is a must-to-be told one, and everyone will get a new lease of hope in their life after watching it. The movie is getting released in Tamil, Kannada, Malayalam, Telugu and Hindi. I request everyone to encourage and support this project.”
Actor SJ Suryah said, “If today, I am seen in good and promising onscreen roles, it’s all because of Karthik Subbaraj. I express my heartiest wishes and congratulations to the entire team of 777 Charlie. The passion and vision of director has made this project achieve such a fabulous output. Initially, I thought this movie is a low-budget fare, but was surprised to see it being filmed across various part of the country in grandeur. This loveable dog Charlie has delivered a beautiful performance. The emotions it has delivered in this movie is extraordinary. This is a good content-driven story, and I am happy that it is getting released through Stone Bench. They would never miss from releasing a good movie. This will be a completely fresh and different experience for the audiences in Tamil. The earnest dedication of Rakshit Shetty sir deserves special appreciations. I request the people of Tamil Nadu to support this movie.”
Actor Rakshit Shetty said, “This is a very special and close to heart project for me. 777 Charlie has personally transformed my life in many ways. The movie was completed 1 ½ years back itself. Being a producer of this movie, I had the thoughts of releasing it on OTT platform. However, after watching the final output, I had self-assurance that, whatever, maybe the situation, I have to release it in the theaters. Every movie isn’t possible to be acknowledged as Pan-Indian movie, but this one has lots of qualities that will make it so for there is such content in this flick. The efforts and dedication of entire movie crew has been outstanding. Stone Bench was the first one to associate with this project. They have always encouraged good contents. I thank them for adding their Midas-touch to this project.”
777 Charlie is produced by Rakshit Shetty and GS Gupta. Director-producer Karthik Subbaraj is releasing this movie in Tamil through his Stone Bench Productions, Rana Daggubati in Telugu and actor-producer Prithviraj in Malayalam. The film has been shot across Mysore, Bangalore, Chik Mangalore, Goa, Rajasthan, and Kashmir. Raj B Shetty, Sangeetha Sirungeri, Danish Sait and Bobby Simha have performed prominent characters. Nobin Paul has composed songs and BGM for this movie. Aravind S Kashyap has handled cinematography, and Pradeep Shetty has taken care of editing.
Spiking up the expectations to a greater level, 777 Charlie is all set for the worldwide theatrical release in Tamil, Kannada, Malayalam, Telugu and Hindi on June 10, 2022.
“777 சார்லி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
இயக்குநர் கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி’
‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினில்
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சக்தி பிலிம்ஸ், சக்தி வேலன் கூறியதாவது
கார்த்திக் சுப்ராஜ் இந்த படத்தை எனக்கு போட்டு காட்டி, இதை வெளியிட வேண்டும் என்றார். இந்த படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்லபிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்த படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
ராஜ் பி ஷெட்டி கூறியதாவது…
இந்த படத்தில் கால்நடை மருத்துவராக நடித்துள்ளேன். இந்த படத்தை சிறப்பாக எடுக்க முயற்சிக்கும் குழுவில் ஒரு ஆளாக இருக்க விரும்பினேன். நான் கூட இந்த படம் எடுக்க முன்வர மாட்டேன். இந்த படம் அத்தனை கடினமானது. நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும். இயக்குனர் கிரண்ராஜ், ரக்ஷித் ஷெட்டி அவர்களுக்கு நன்றி. படத்தை வெளியிடும் ஸ்டோன் பெஞ்ச்-நிறுவனத்திற்க்கு நன்றி.
ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன், கூறியதாவது…
இந்த படத்தை எங்களுக்கு போட்டு காட்டிய போது பிரமித்து போனோம். நானும், கார்த்திக் சுப்புராஜும் படத்தை பார்த்துவிட்டு எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என தெரியவில்லை பேசிக்கொண்டோம். திரைப்படங்கள் மீது பெரிய காதல் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும். நாங்கள் இந்த படத்தை பார்த்தவுடன் வெளியிட விரும்பினோம். எங்களுக்கும் இந்த படம் பெரிய உத்வேகத்தை கொடுத்தது. ரக்ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரணுக்கு வாழ்த்துகள். ஒரு நாயை இப்படி நடிக்க வைத்தது பெரிய சவாலான விஷயம். சார்லி உடைய நடிப்பு அபாரமாக இருக்கிறது. டப்பிங்க் பணிகளை பார்த்துகொண்ட டப்பிங் குழு இதை ஒரு நேரடி தமிழ் படம் போல் உருவாக்கியுள்ளனர். எஸ் ஜே சூர்யா சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன். 777 சார்லி – க்கு வாழ்த்துகள் கூறிகொள்கிறேன்.
நடிகை சங்கீதா கூறியதாவது…
செல்லப்பிராணி நாய் உடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இந்த படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தில் பணியாற்றியதில் பெருமைபடுகிறேன். இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.
இயக்குனர் கிரண்ராஜ் கூறியதாவது..
நான் செல்லபிராணி விரும்பி, அதனால் தான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். இந்த படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் என தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்த படத்தை துவங்கினோம். ரக்ஷித் ஷெட்டி கதையை கேட்டு, நாம் கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம் என கூறினார். பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு என ரக்ஷித் ஊக்கமளித்தார். நடிகர்கள் ரக்ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்த படத்துக்காக கொடுத்துள்ளனர். கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிகதிறமையானவர்கள், தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாக பேசியுள்ளார். இந்த கதையில் எனக்கு இருந்த தெளிவு, தயாரிப்பாளருக்கும் இருந்தது. இந்த படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடி தமிழ் படம் என்று கூறுவீர்கள். இந்த படத்தில் நடித்த நாய்(சார்லி)யை தேர்ந்தெடுக்க நாங்கள் பல இடங்களில் தேடிகொண்டிருந்தோம். பின்னர் பல நாள் கழித்து இந்த நாயை கண்டுபிடித்தோம். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது…
கொரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் எனக்கு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குனர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தின் நாய் காட்சி எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை இந்த படத்தின் கதை நிச்சயமாக கூற பட வேண்டிய கதை. இந்த படம் பார்த்த பின்னர் வாழ்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. படம் பார்த்துவிட்டு கூறுங்கள் நன்றி
நடிகர் எஸ் ஜே சூர்யா கூறியதாவது…
நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தை விட படத்தில் பணியாற்றிய நாய், படக்குழு மற்றும் இயக்குனருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இயக்குனர் உடைய ஆர்வம் தான் இந்த படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. 777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்த படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களை தவறவிடமாட்டார்கள். இந்த படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரக்ஷித் சாருடைய அர்பணிப்பை நான் பாராட்டுகிறேன். தமிழக மக்கள் 777 சார்லி க்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி
நடிகர் ரக்ஷித் ஷெட்டி கூறியதாவது…
இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு . சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. 1 1/2 வருடத்திற்கு முன்னரே படம் முடிந்துவிட்டது. நான் இந்த படத்தை தயாரித்துள்ளேன், அதனால் எனக்கு படம் ஒடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் படத்தை முழுமையாக பார்த்தபிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தை பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்கு தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்த படத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச். ஸ்டோன் பெஞ்ச் எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும். அவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள் நன்றி.
777 சார்லியை ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டக்குபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் வழங்குகிறார்கள்.
மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் 777 சார்லி படமாக்கப்பட்டுள்ளது. ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 777 சார்லி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.