Colors Tamil brings powerhouse of talents with the launch of its brand-new non-fiction talent show Vellum Thiramai starting June 4th
~Tune into Colors Tamil, on Saturday, June 4th at 7pm to witness the grand launch and watch unbelievable acts ~
A picture containing calendar
Description automatically generated
Chennai, 3rd June 2022: Bringing to spotlight a pool of talent from different parts of the country, Colors Tamil, the meaningful entertainment channel, is all set to launch a brand new talent show, Vellum Thiramai, starting this Saturday, June 4th, at 7pm. Vellum Thiramai, powered by Vasanth & Co. AC Mela and Special Partner Eldia Thuya Thenga Ennai, is the Tamil adaptation of Viacom18’s popular homegrown talent show, Hunarbaaz: Desh Ki Shaan. It features charming Actor Nikki Galrani, popular Actor and Karate Expert Shihan Hussaini and renowned Choreographer Sridhar as judges.
Vellum Thiramai marks a one-of-a-kind talent show that puts forth the best of the acts from across India while also providing a platform in a special segment for regional and local talents who will present stunning renditions from dancing to magic, martial arts & other talents which viewers never seen. The hour-long show will span over 16 episodes, with VJ Andrews hosting it.
Commenting on the launch, Mr. Rajaraman S, Business Head, Colors Tamil, said “It has always been our objective at Colors Tamil to offer our viewers with creative and indigenous content in both fiction and nonfiction programming. India is a country brimming with talent, which can be found in every corner. This show gives the country’s undiscovered and exceptional talents a chance to shine in front of millions. Our purpose with ‘Vellum Thirumai’ is to present distinct talents to the tamil viewers. This is only the beginning, and we are looking forward to seeing what these young minds have in store for us.”
Charming Actor Nikki Galrani said, “I have always thought highly of talent shows and I take pride in debuting on television with Vellum Thiramai. I will get to meet phenomenal talents. I am very happy that youngsters across India will get a platform to showcase themselves and become a role model for millions.”
Adding to this, popular Actor and Karate Expert, Shihan Hussaini said, “This is my first association with Colors Tamil and I am glad that the channel is bringing a show that is all set to celebrate people’s skills and talents. This is the first time that I will be judging a show so unique. I am indeed thrilled to see what the contestants have in store for us.”
Renowned Choreographer Sridhar said, “I would like to compliment the Colors Tamil on identifying such amazing talents and bringing them to limelight. I deem that this show will leave the audiences awestruck and make the nation proud with their art. Also, I am happy to be back on in the channel after successful completion of Dance vs Dance 2”
With Vellum Thiramai, the channel aims to transform the Tamil reality space by taking viewers on an unforgettable journey through a unique combination of talent and ability. The show, regardless of gender, geography, socio-economic background, promises top-notch entertainment. Don’t forget to tune in to Colors Tamil on Saturday , June 4th from 7 PM onwards, to watch a slew of stellar performances with Vellum Thiramai. Colors Tamil is available on all leading cable networks and DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553). Viewers can also tune in to VOOT any time to see Colors Tamil shows at their convenience.
Promo Link: https://www.facebook.com/ColorsTvTamil/videos/334439712137967
நாடெங்கிலும் உள்ள திறமையாளர்களை கண்டறிந்து அவர்களின் திறமையை வெளிக்காட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்கும் ஒரு தளம்
திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்
‘வெல்லும் திறமை’ புத்தம் புதிய நிகழ்ச்சி: ஜூன் 4 முதல்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
––––––
~சனிக்கிழமை ஜூன் 4–ந்தேதி மாலை 7 மணிக்கு
கலர்ஸ் தமிழை டியூன் செய்யுங்கள், புதிய நிகழ்ச்சி அறிமுகத்தை பார்த்து ரசியுங்கள்
Image
சென்னை, ஜூன் 3, 2022– நாடு முழுவதும் உள்ள மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அர்த்தமுள்ள பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக விளங்கி வரும் கலர்ஸ் தமிழ், ‘வெல்லும் திறமை’ என்னும் புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. பவர்டு-பை வசந்த் அன்ட் கோ ஏசிமேளா மற்றும் ஸ்பெஷல் பார்ட்னர் எல்டியா தூயதேங்காய் எண்ணெய் இணைந்து வழங்கும் வெல்லும்திறமை’, சனிக்கிழமை ஜூன் 4–ந்தேதி மாலை 7 மணிக்கு துவங்க உள்ளது. வயாகாம் 18 நிறுவனத்தால்
தயாரிக்கப்பட்ட ஹுனார்பாஸ்:
தேஷ் கி ஷான் என்னும் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பான வெல்லும் திறமையில், நிகழ்ச்சிக்கு நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான்ஹுசைனி மற்றும் புகழ்பெற்ற நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
வெல்லும் திறமை என்பது இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். அத்துடன் இந்த நிகழ்ச்சி
அந்தந்த பகுதி மற்றும் உள்ளூர் பகுதி மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அவர்கள் நடனம் முதல் மாயாஜாலம், தற்காப்புக் கலைகள் வரை பிரமிக்கவைக்கும் தங்கள் திறமைகளை இந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தி மக்களை வியப்பில் ஆழ்த்த தயாராக உள்ளனர். சனிக்கிழமை தோறும் 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி 16 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதை ஆன்ட்ரூஸ் தொகுத்துவழங்க இருக்கிறார்.
புதிய நிகழ்ச்சி அறிமுகம் குறித்து கலர்ஸ் தமிழ் வர்த்தகப்பிரிவு தலைவர் திரு ராஜாராமன்கூறுகையில், “புனைக்கதைகள் மற்றும் அர்த்தமுள்ளபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மூலையிலும் ஏராளமான திறமையானவர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி யாராலும் கண்டறியப்படாத திறமையான லட்சக்கணக்கானவர்களை வெளி உலகிற்கு காட்டுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ‘வெல்லும் திறமை’யின் முக்கிய நோக்கமே தமிழ் பார்வையாளர்களுக்கு தனித்துவமான திறமைகளை வழங்குவதாகும். இது ஆரம்பம் மட்டுமே, இளம் மனங்கள் நமக்காக என்னென்ன திறமைகளை வெளிப்படுத்த இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க உங்களுடன் நாங்களும் ஆவலாக காத்திருக்கிறோம்”
என்று தெரிவித்தார்.
நடிகை நிக்கி கல்ராணி நிகழ்ச்சி குறித்து கூறுகையில், திறமை சார்ந்த நிகழ்ச்சிகள் மீது எனக்கு அலாதி பிரியம் உண்டு. ‘வெல்லும் திறமை’ நிகழ்ச்சியில் நானும் இணைந்து இருப்பது குறித்துமிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் அபார திறமைசாலிகளை பார்க்க ஆவலாக உள்ளேன். இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒருதளமாக இது அமைவதோடு, லட்சக்கணக்கானவர்களுக்கு இந்த நிகழ்ச்சி முன் மாதிரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
பிரபல நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான்ஹுசைனி கூறுகையில், “கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியுடன் நான் முதல்முறையாக இணைந்துள்ளேன். மக்களின் திறமைகளை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சியை கலர்ஸ்தமிழ் ஒளிபரப்புவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வளவு தனித்துவமிக்க ஒரு நிகழ்ச்சிக்கு நான் நடுவராக இருப்பது இதுவே முதல்முறை ஆகும். போட்டியாளர்கள் நமக்காக என்னென்ன திறமைகளை வெளிக்காட்ட இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.
பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் கூறுகையில், “இப்படிப்பட்ட அற்புதமான திறமைசாலிகளைகண்டறிந்து அவர்களை திறமைகளை வெளிச்சத்துக்குக்கொண்டு வர முன் வந்திருக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தநிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்மற்றும் இதில் பங்கேற்பவர்களின் திறமை தேசத்தை பெருமைப்படுத்தும் என்று நான் கருதுகிறேன். மேலும், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2 வெற்றிகரமாக முடிந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக மீண்டும் கலர்ஸ் தமிழுடன் இணைந்து இருப்பது குறித்து மிகவும்மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களை மறக்கமுடியாத பயணத்திற்கு கலர்ஸ் தமிழ் அழைத்து செல்ல இருக்கிறது. இந்த நிகழ்ச்சி சிறந்த பொழுது போக்கிற்கு உறுதியளிக்கிறது. எனவே 4–ந்தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழ்தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் ‘வெல்லும்திறமை’ நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள்.