Chennai, June 10th, 2022: Colors Tamil, the meaningful entertainment channel is all primed up to bring the World Television Premiere of Clap this weekend, June 12th,Sunday. A treat for sport fanatics, the most anticipated movie of 2022, featuring Actor Aadhi Pinisetty and Actor Aakanksha Singh as the main protagonists. Traversing around the trials and tribulations of a sports athlete, tune into Colors Tamil to watch an endearing movie that proves hardwork never fails , this Sunday, June 12th at 2pm.

Directed by Prithivi Adithya, the sports-drama film stars Actor Aadhi Pinisetty and Actor Aakanksha Singh in the leads, followed by Actor Nassar, Actor Prakash Raj, Actor Krishna Kurup, Actor Munishkanth, Actor Mime Gopi, and Actor Sriranjini as the stellar ensemble.
The plot narrates the life of a former national athlete, Kathir ( Actor Aadhi Pinisetty) who meets with a fatal accident and loses a limb, thereby shattering his dreams of winning the National Athletics Championship. Kathir’s relationship with his wife Mithra (Aakanksha Singh) suffers because of the tragedy and his post-traumatic stress , and he stops conversing with her. A turn of events changes his life after a state tournament, where he learns of a rural girl named Bhagyalakshmi (Krisha Kurup) and her sprinting potential. He approaches her and offers to help her prepare for the national championships.

After several coaches refuse to take her under their wing owing to power dynamics in the sport and an old animosity with an association authority, Venkatram (Nasser), Kathir himself, coaches the girl. Does the girl conquer all obstacles to win the national title and does the amputee ex-athlete achieve his ambition through his protégé forms the rest of the plot.

Commenting on the premiere, Director Prithvi Adithya said, “The idea with Clap was to deliver a sports drama in a non-linear fashion, thus the film has myriad of tropes from sport politics, power dynamics, to exploring the relationship between a husband and wife and that of a student and protégé. Aadhi has proved his mettle as a phenomenal actor where he brilliantly portrays the character fighting his inner battles and the rest of the cast has equally performed astoundingly well. I am confident that our efforts will appeal to the audiences watching the World Television Premiere of Clap, this weekend.”

Adding to this, Actor Aadhi Pinishetty said, “I am thrilled that Clap is having a World Television Premiere on a popular channel like Colors Tamil. I am sure that the audiences will truly appreciate the film this weekend like they did in the theatres. Kathir as a character has different shades and holds countless emotions , hence it is a distinct role altogether.”

With music maestro Ilaiyaraaja composing the background score , the film further finds an added asset making it an enjoyable watch for the audiences.

Get ready for a ride on a roller coaster of emotions with the World Television Premiere, Clap on Colors Tamil, this Sunday, June 12th at 2:00 pm. Colors Tamil is available on all leading cable networks and DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553).

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக
ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான க்ளாப் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

சென்னை, ஜு 10, 2022: தமிழகத்தின் அர்த்தம் உள்ள பொழுதுபோக்கை வழங்கும் சேனல் என புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ் இந்த வார இறுதியில் ஜுன் 12 ஞாயிறன்று க்ளாப் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை ரசிகர்களுக்காக வழங்க தயாராக இருக்கிறது. விளையாட்டு ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு சிறப்பான திரை விருந்தாக இது இருக்கும். 2022- ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்ற திரைப்படமான க்ளாப் – ல் முதன்மை கதாபாத்திரங்களாக நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நடிகை அகான்ஷா சிங் நடித்திருக்கின்றனர். ஒரு தடகள விளையாட்டு வீரர் எதிர்கொள்ளும் சோதனைகள் மற்றும் சவால்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் உணர்ச்சிகரமான இந்த திரைப்படத்தை கண்டு ரசிக்க ஜுன் 12 ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்குத் தவறாமல் கலர்ஸ் தமிழை டியூன் செய்யுங்கள். மனம் தளராத கடினமான உழைப்பு ஒருபோதும் தோல்வியடைவதில்லை என்பதை நிரூபிக்கின்ற கதைக்களம் ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்பது நிச்சயம்.

பிரித்வி ஆதித்யாவின் இயக்கத்தில் உருவான இந்த ஸ்போர்ட்ஸ் – டிராமா திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் நடிகை அகான்ஷா சிங் ஆகியோரோடு முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்களான நாசர், பிரகாஷ்ராஜ், கிருஷ்ணா குரூப், முனீஷ்காந்த், மைம் கோபி மற்றும் நடிகை ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீரர் கதிர் (நடிகர் ஆதி பினிசெட்டியின் நடிப்பில்) – ன் வாழ்க்கையை திரைக்கதை விவரிக்கிறது. ஒரு கடும் விபத்தை எதிர்கொள்ளும் கதிர், அதனால் காலை இழக்கிறார்; தேசிய தடகளப்போட்டி சேம்பியனாக வெல்ல வேண்டும் என்ற அவரது கனவுகள் இதனால் சுக்குநூறாக உடைகின்றன. இந்த கடும் சோகத்தின் விளைவாகவும் மற்றும் விபத்திற்குப் பிந்தைய மனஅழுத்தத்தின் காரணமாகவும் அவரது மனைவி மித்ரா (அகான்ஷா சிங் நடிப்பில்) உடன் கதிரின் உறவு பெரிதும் பாதிக்கப்படுகிறது. மனைவியோடு பேசுவதையே கதிர் நிறுத்தி விடுகிறார். மாநில அளவிலான ஒரு பேட்டிக்குப் பிறகு நிகழும் சில நிகழ்வுகள் அவரது வாழ்க்கையையே மாற்றுகின்றன. பாக்கியலட்சுமி என்ற பெயருள்ள ஒரு கிராமப்புற பெண் மற்றும் மற்றும் வேகமாக ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் அவளது திறன் பற்றி கதிருக்குத் தெரிய வருகிறது. அவளை சந்திக்கும் கதிர், தேசிய சேம்பியன்ஷிப் போட்டிக்கு அப்பெண்ணை தயார் செய்ய தனது விருப்பத்தை தெரிவிக்கிறார். விளையாட்டுத் துறையில் இருக்கும் ஆதிக்க உணர்வு மற்றும் போட்டிகளின் காரணமாகவும் மற்றும் விளையாட்டு சங்கத்தில் மக்கியப் பொறுப்பு வகிக்கும் வெங்கட்ராம் (நாசர்) உடன் இருக்கும் பழைய வெறுப்பு / மோதலின் காரணமாக பல பயிற்சியாளர்கள் பாக்கியலட்சுமிக்கு பயிற்சியளிக்க மறுத்துவிடுகின்ற நிலையில், கதிர் தானாக முன்வந்து அப்பெண்ணுக்கு பயிற்சியளிக்கிறார். அனைத்து தடைகளையும் இந்த கிராமப்புற பெண் தகர்த்தெறிந்து தேசிய அளவில் வெற்றி வாகை சூடி விருது பெறுகிறாரா மற்றும் தான் பயிற்சியளிக்கும் பெண்ணின் வழியாக காலை இழந்த முன்னாள் விளையாட்டு வீரரான கதிர் அவரது நீண்டகால கனவை நனவாக்குகிறாரா என்பதை மீதிக்கதை நேர்த்தியாக சொல்கிறது.

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ப்ரீமியர் குறித்து இதன் இயக்குனர் ப்ரித்வி ஆதித்யா கூறியதாவது: ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா கதையை நேரியல் அற்ற வடிவத்தில் வழங்குவதே க்ளாப் திரைப்படத்தில் எனது நோக்கமாக இருந்தது. இதனால் விளையாட்டில் காணப்படும் அரசியல், பதவி / ஆதிக்கப் போட்டிகள் என்பவற்றிலிருந்து ஒரு கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலான உறவு மற்றும் ஒரு மாணவருக்கும், குருவுக்கும் இடையிலான உறவு என பல்வேறு அம்சங்களை இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. தனது உள்ளார்ந்த யுத்தங்களை எதிர்கொள்கின்ற இக்கதாபாத்திரத்தை நடிகர் ஆதி மிகப் பிரமாதமாக இதில் சித்தரித்திருக்கிறார். மிக அற்புதமான நடிகர் என்ற அவரது திறனை இத்திரைப்படத்தில் ஆதி நேர்த்தியாக நிரூபித்திருக்கிறார். ஆதி மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுமே மிகச்சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் க்ளாப் – ன் உலக தொலைக்காட்சி ப்ரீமியரை பார்த்து ரசிக்கின்ற பார்வையாளர்கள் எமது திரைப்படக் குழுவினரின் முயற்சிகளை அங்கீகரித்துப் பாராட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆதி பினிஷெட்டி, “தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான சேனலான கலர்ஸ் தமிழில் க்ளாப் திரைப்படம், உலகளாவிய தொலைக்காட்சி ப்ரீமியராக வெளிவருவது எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது. திரையரங்குகளில் இத்திரைப்படத்தை பார்த்து ரசித்ததைப் போலவே இந்த வார இறுதி நாட்களில் தொலைக்காட்சிகளிலும் பார்த்து பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு கதாபாத்திரமாக பல்வேறு பரிமாணங்களை கதிர் கொண்டிருக்கிறார்; எண்ணற்ற உணர்வுகளின் சங்கமம் இந்த கதாபாத்திரத்தில் நிகழ்கிறது. எனவே, இது முற்றிலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரமாக எனக்கு இருந்தது.” என்று கூறினார்.

இத்திரைப்படத்தின் பின்னணி இசையை இசைஞானி இளையராஜா வழங்கியிருப்பது பார்வையாளர்கள் கட்டாயம் பார்த்து மகிழ்ச்சியடைகின்ற மற்றொரு சிறப்பம்சமாக இத்திரைப்படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஜுன் 12, இந்த ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியராக ஒளிபரப்பாகும் க்ளாப் திரைப்படத்தை கண்டு ரசிக்க தயாராகுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here