Producer Thai Saravanan of Nallusamy Pictures is producing the movie titled ‘Valli Mayil’. The film, directed by Susienthiran, features Vijay Antony, Bharathiraja, Sathyaraj in the lead roles. The film is set against the backdrops of stage play/drama arts in the 80s. Marking the occasion of first look launch, the entire cast and crew of this movie interacted with press and media fraternity.

Dialogue Bhaskar Sakthi said, “Director Susienthiran is one among the rarest breed of filmmakers, who has made lots of good quality movies in a short span of time. He read one of my novels, and translated it into the visual adaption titled ‘Azhagar Saamiyin Kuthirai’. We had been discussing about the screenplay of Valli Mayil for a very long time. This project is result of our hard work. This movie will leave a deep impact in the movie industry, and I am confident that it will impress you all.”

Costume Designer Radhika said, “Since the movie is set against the backdrops of 80s, it instilled in me more challenges and responsibilities to deliver the best. We have given the best with lots of detailing. I request everyone to support this movie. Thanks.”

Art Director Udhayakumar said, “Working in a period film has lots of challenges. In fact, it’s a dream for every art director to work in a period film, and I am happy that it has come true with this project. All of us have exerted our best hard work in this project.”

Lyricist Vivega said, “I have written lyrics for a couple of songs. This is the first time, I am penning lyrics for a Vijay Antony sir movie after he became a hero. I am confident that the songs will be one of the greatest highlights. I wish everyone in the team for the great success.”

Actor Dhayalan said, “Working with director Susienthiran sir has imparted a big lease of responsibility in all of us. His insatiable dedication kept encouraging us. This movie will be a kind of treat for audiences from all walks of life. I request everyone to support this movie.”

Actress Aranthangi Nisha said, “Although I have done few movies, Valli Mayil has given me more scope to exhibit my potentials. Director Susienthiran is someone, who always heeds to the suggestions of the artistes. He has given me a role that will attract all groups of audiences. This movie will definitely earn good success for all of us. Vijay Antony sir has the kind gesture of appreciating his co-stars. Tamil Cinema has got a talented actress like Priya through this movie. Valli Mayil is a movie that acclaims the glory of drama artistes. We, as a team, believe that the movie will earn us good success.”

Actress Faria Abdullah said, “I embarked on my acting journey as a theater artiste. The patience and persistence of Susienthiran sir is the main reason behind this movie getting shaped in an efficient manner. He played me the musical part while narrating the script to me. I decided to be a part of this movie banking my complete trust on his perspective. This will be a movie that will be liked by audiences from all walks of life. I request all of you to support this movie.”

Director Susienthiran said, “I have been writing the script of this movie for past four years. It will definitely become one of the most prominent and promising movies in the pages of Indian cinema. This will be a movie that everyone can easily relate with. This movie has exploited our hard work in a great manner. Priya is playing the role of Valli Mayil. She is the soul of this movie. This movie is getting released simultaneously in various languages. Actress Kalpana’s daughter is getting introduced in this movie. Kani Agathiyan is getting introduced as heroine in this movie. This is an important movie in my career. D Imman is a sincere hard worker. So far, I have worked with him in 9 movies. Everyone involved in this project have given their heart and soul into their respective works. This movie will be an amalgamation of action, humour and emotions.”

Actor Vijay Antony said, “I have learnt the craftsmanship of direction for Susienthiran while working with him in this movie. Since, I have also stepped into this domain, I have been carefully inheriting the nuances from him. He has been shaping this movie with lots of scrutinizing efforts. There is a huge star cast involved in this movie. Their acting prowess is extraordinary. I wish everyone in the team for the great recognition and success of this movie. I thank them as well for their earnest support.”

D Imman is composing music for this movie, Bhaskar Sakthi is penning dialogues and the others in the technical crew are Vijay Chakravarthy (Cinematography), Anthony (Editor), Udhayakumar (Art Director), Sathish AIM (PRO), Tuny John (Publicity Designs). The others in the star cast includes Aranthangi Nisha, Kani Agathiyan, Pushpa fame Sunil, Redin Kingsley, GP Muthu, Dhayalan and many more prominent actors.

வள்ளி மயில்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்

வசனகர்த்தா பாஸ்கர் சக்தி கூறியதாவது..,
குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிகொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’. இந்த திரைப்படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நிச்சயம் பிடித்தபடமாக இருக்கும்.

ஆடை வடிவமைப்பாளர் ராதிகா கூறியதாவது..,
இந்த படம் 80 காலகட்டத்தில் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. நன்றி

கலை இயக்குனர் உதயகுமார் கூறியதாவது..,
பீரியட் படம் பண்ணுவது சவாலான விஷயமாக இருக்கும். ஒவ்வொரு கலை இயக்குனருக்கும் பீரியட் படம் பண்ண வேண்டுமென்பது கனவு. எனக்கு இந்த படத்தில் அது நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் குழுவாக சேர்ந்து பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

பாடலாசிரியர் விவேகா கூறியதாவது..,
இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். விஜய் ஆண்டனி சார் கதாநாயகன் ஆன பிறகு, நான் அவருக்கு எழுதும் முதல் பாடல். இந்த படத்தின் பாடல்கள் பிரமாதமாக வரும். இந்த படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

நடிகை கனி கூறியதாவது..,
நிறைய நுணுக்கமான விஷயங்களை திரையில் கூறுபவர் சுசீந்திரன். எனக்கு பீரியட் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டேன். எனக்கு வாய்ப்பளித்த படக்குழுவிற்கு நன்றி.

நடிகர் தயாளன் கூறியதாவது..,
இயக்குனர் உடன் பணிபுரிந்த அனுபவம், எங்களுக்கு பெரிய பொறுப்புணர்வை கொடுத்தது. அவருடைய அர்பணிப்பு எங்களையும் ஊக்கபடுத்தியது. படம் கண்டிப்பாக பிடித்தமான ஒன்றாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தர வேண்டும்.

நடிகை அறந்தாங்கி நிஷா கூறியதாவது..,
சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும். விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார். வள்ளி மயில் திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நடிகை ஃபரியா அப்துல்லா கூறியதாவது..,
நான் தியேட்டர் கலைஞராக தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரன் உடைய பொறுமை தான், இந்த கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக்காட்டினார், நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டுள்ளேன். இந்த கதை நிச்சயம் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது..,
இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. நடிகை கல்பனா உடைய மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார், கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும். “

நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது..,
இந்த படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன், படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் கூறிகொள்கிறேன்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), பப்ளிசிட்டி டிசைன்ஸ் – ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர். இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here