ஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கியுள்ள படம் வீட்ல விஷேசம். இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி, மறைந்த பிரலப நடிகை லலிதா, அபர்ணா முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி தன்னுடைய பாணியில் தமிழுக்காக சற்றே மெருகேற்றியுள்ளது சிறப்பு.

விரைவில் பணி ஓய்வு பெறப்போகும் சத்யராஜின் மனைவியான ஐம்பது வயதை கடந்த ஊர்வசி திடீரென கர்ப்பமாகிறார். திருமணவயதில் இருக்கும் சத்யராஜின் மூத்த மகன் ஆர்ஜே பாலாஜி, பள்ளி இறுதியாண்டு படிக்கும் இளையமகன் ஆகியோருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்குகிறது. சமுதாயம் என்ன நினைக்கும், தன்னுடைய காதலியான அபர்ணா எப்ப நினைப்பார் என்று மருகுகிறார் ஆர்ஜே பாலாஜி. நினைத்தது போலவே அக்கம் பக்கம் மற்றும் உறவுகளில் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறது சத்யராஜ் குடும்பம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி அந்த குடும்பம் வெளியே வந்தது என்பதே விட்ல விஷேசம் படத்தின் கதை.

ஒரு வரி கதையை கேட்டவுடன் ஏதோ சோகக்கதையாக இருக்குமோ என நினைக்க வேண்டாம், படம் முழுக்க கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. ஆர்ஜே பாலாஜியின் டைமிங் காமெடி படம் முழுக்க சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. சத்யராஜ் அடிக்கும் லூட்டிகள் மிக வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் படத்தின் ஹிரோ ஹீரோயின் பாலாஜி அபர்ணா ஜோடி இல்லை சத்யராஜ் ஊர்வசி ஜோடிதான். பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லலிதா அட்ராசிடி செய்கிறார். ஊர்வசிக்கு லலிதா சப்போர்ட் செய்யும் காட்சி நிச்சயமாக அனைவருக்கும் கண்ணில் நீரை வரவழைத்துவிடும். அபர்ணா முரளி நன்றாக நடித்திருக்கிறார். புகழ், மயில்சாமி என பல நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் சத்யராஜ் குடும்ப உறுப்பினர்களை தாண்டி மற்ற பாத்திரங்கள் ஜொலிக்கவில்லை.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விசயங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன
குடும்ப கதை என்ற ஜேனர் தமிழ் சினிமாவில் உண்டு. அந்த வகையில் நீண்ட காலத்துக்குப்பிறகு ஒரு உண்மையான குடும்பக்கதை. அதுமட்டுமல்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் கதையாகவும் இருக்கிறது.

வீட்ல விஷேசம் தமிழ்நாட்ல விஷேசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here