Chennai, 21st July 2022: Campus tales have always been a part of everyone’s nostalgic memories; driving the same notion, Colors Tamil, a meaningful entertainment channel brings to screens the World Television Premiere of Hostel, a dark comedy film this Sunday, 24th July at 2:00pm. Featuring Actor Ashok Selvan and Actor Priya Bhavani Shankar, the film revolves around a girl who gets stuck at a boys’ hostel and the horrors surrounding it. Tune into Colors Tamil for a hair-raising and rib-tickling experience this weekend, Sunday, 24th July at 2:00pm

Directed by Sumanth Radhakrishnan, Hostel further features Actor Sathish, Veteran Actor Nasser and Actor Munishkanth as the supporting cast. The narrative of the film revolves around a bunch of college students who have a hilarious run-in with a ghost at their dorms and at the same time escape from the clutches of their strict warden. The film further also explores themes like unrealistic beauty standards and imperfections of the human body.

Believing that discipline is everything, Father Kuriakose (played by Actor Nasser), the hostel warden strives to teach the same to every student under his wing. He comes across Kathir (played by Ashok Selvan) who never seems to pay heed to his authoritative nature. Kathir struggles with financial problems and one fine day he crosses paths with Adhirshtalakshmi (played by Actor Priya Bhavani Shankar) who offers him money in exchange for letting her spend a night at the boys hostel. Thinking this to be a fair deal, Kathir keeps his promise. Why Adhirshtalakshmi wanted to enter the hostel and what mysteries lie in the place form the rest of the plot.

Commenting on the occasion. Director Sumanth Radhakrishnan, said “I have had a wonderful experience working with the cast of the film and we had a fun time behind the sets as well.The film is an attempt to bring to light themes of hat is much prevalent in a light- hearted manner. I am sure with the World Television Premiere of the film on a prominent channel like Colors Tamil, the audiences are bound to have a fantastic weekend.”

Adding to this, Actor Ashok Selvan said, “This film is yet another attempt to experiment with something new with a blend of horror and hilarity. It was tough to perfect our comic timings and all of us have put in our best efforts to render a beautiful creation with Hostel and I am confident that families watching the World Television Premiere on Colors Tamil will forget all their worries and have a gala time.”

Tune into Colors Tamil,to witness a blend of humour and horror, this Sunday, July 24th at 2:00PM with the World Television Premiere of Hostel. Colors Tamil is available on all leading cable networks and DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553).

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நகைச்சுவையும், மர்மமும் கலந்த ஹாஸ்டல் திரைப்படத்தை ஒலிபரப்பும் கலர்ஸ் தமி

சென்னை, 21 ஜுலை 2022: பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொருவர் மனதிலும் என்றும் பசுமையான நினைவுகளாக எப்போதும் இருக்கும். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் அர்த்தமுள்ள பொழுதுபோக்குச் சேனல் என்று புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், ஜுலை 24 ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு டார்க் காமெடி வகையினத்தைச் சேர்ந்த ஹாஸ்டல் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை வழங்குகிறது. இளையோர்களின் மனம் கவர்ந்த நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை பிரியா பவானிசங்கர் நடித்திருக்கும் இத்திரைப்படம், மாணவர்களது விடுதியில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளம் பெண் மற்றும் அதையொட்டி நடைபெறும் மர்மமும், திகிலும் கலந்த பயங்கர நிகழ்வுகளை சுவாரஸ்யமாக எடுத்துக்காட்டுகிறது. ஜுலை 24, வரும் ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு இத்திரைப்படத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்யுங்கள்; திகிலுடன் வாய்விட்டு வயிறு புண்ணாகக்கூடிய அளவிற்கு சிரிக்கக்கூடிய காட்சிகளுக்கும் இதில் பஞ்சமில்லை.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஹாஸ்டல் திரைப்படத்தில் நடிகர் சதீஷ், பழம்பெரும் நடிகர் நாசர் மற்றும் நடிகர் முனீஷ்காந்த் ஆகியோரும் முக்கிய துணைத் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தங்களது விடுதி அறைகளில் ஒரு ஆவியுடன் அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் எதிர்கொள்கின்றன நிகழ்வுகளை இத்திரைப்படம் ரசிக்கும்படியாக சித்தரிக்கிறது. மிகவும் கண்டிப்பான விடுதி வார்டனின் பிடியிலிருந்து, அதே நேரத்தில் அவர்கள் தப்பிப்பது திரைக்கதைக்கு மேலும் சுவாரஸ்யத்தை சேர்த்து தருகிறது. அழகு குறித்து நிலவுகின்ற யதார்த்தமற்ற தரநிலைகள் பற்றிய கண்ணோட்டம் மற்றும் மனித உடலின் குறைபாடுகள் போன்ற வித்தியாசமான கருத்தாக்கங்களையும் இத்திரைப்படம் ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

ஒழுங்கு கட்டுப்பாடுதான் முதன்மையானது என்று நம்புகின்ற ஹாஸ்டல் வார்டனான பாதிரியார் குரியாகோஸ் (நடிகர் நாசர் நடிப்பில்) இதே நம்பிக்கையை தனது பொறுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் வலியுறுத்தி கற்பிக்க முற்படுகிறார். அவரது கண்டிப்பான சர்வாதிகாரத்தனத்தை ஒருபோதும் மதிக்காதவராக கதிர் (அசோக் செல்வன் நடிப்பில்) என்ற கல்லூரி மாணவரை ஹாஸ்டல் வார்டன் எதிர்கொள்ள நேரிடுகிறது. பணப் பிரச்சனைகளினால் கடும் சிரமப்படும் கதிர் ஒருநாள் அதிர்ஷ்டலட்சுமி (நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில்) என்ற இளம் பெண்ணை சந்திக்கிறார். கல்லூரியில் ஆண் மாணவர்களுக்கான ஹாஸ்டலில் ஒரு நாள் இரவை செலவிட அனுமதிப்பதற்கு பதிலீடாக, கதிருக்கு பணத்தைத் தர அதிர்ஷ்டலட்சுமி முன்வருகிறாள். இதையொரு நியாயமான டீலாக கருதும் கதிர், தான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார். அந்த ஹாஸ்டலுக்குள் வருவதற்கு அதிர்ஷ்டலட்சுமி ஏன் விரும்புகிறார் மற்றும் அந்த விடுதி அமைவிடத்தில் என்ன மர்மங்கள் இருக்கிறது என்பதை கதையின் எஞ்சிய பகுதி நகைச்சுவையையும், திகிலையும் கலந்து சித்தரிக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக கூறியதாவது: “இத்திரைப்பட உருவாக்கத்தில் திறமையும், அனுபவமும் கொண்ட பல நடிகர்களோடு பணியாற்றியது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவமாக எனக்கு இருந்தது. அரங்க அமைப்புகளுக்கு வெளியேயும் கூட கேளிக்கையும், கிண்டலும், மகிழ்ச்சியும் கலந்த தருணங்களாக இத்திரைப்பட உருவாக்கம் எங்களுக்கு இருந்தது. வெறுப்பு என்ற கருத்தாக்கத்தை நகைச்சுவை கலந்து வழங்கும் ஒரு நல்ல முயற்சியாக இத்திரைப்படம் இருக்கிறது. கலர்ஸ் தமிழ் போன்ற தமிழ் மக்களின் அபிமானம் மிக்க சேனலில் இத்திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியர் இடம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் பார்வையாளர்கள் அனைவருக்குமே குதூகலமளிக்கும் சிறப்பான வார இறுதி நாட்கள் அமையுமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

நடிகர் அசோக் செல்வன், ஹாஸ்டல் திரைப்படத்தின் தொலைக்காட்சி ப்ரீமியர் குறித்து பேசுகையில், “திகில் மற்றும் நகைச்சுவையின் நேர்த்தியான கலவையாக புதியதொரு விஷயத்தை கையிலெடுத்து அழகாக சித்தரிக்கும் ஒரு முயற்சியாக இத்திரைப்படம் இருக்கிறது. எங்களது காமெடி டைமிங்குகளை நேர்த்தியாக செயல்படுத்துவது உண்மையிலேயே கடினமானதாக இருந்தது. ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்திருக்கும் நாங்கள் அனைவருமே ஒரு அழகான படைப்பை மக்களுக்கு விருந்தாக படைப்பதற்கு எங்களது சிறந்த முயற்சிகளை செய்திருக்கிறோம். கலர்ஸ் தமிழ் சேனலில் இதன் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை பார்க்கின்ற குடும்பத்தினர் அனைவருமே அவர்களது கவலைகளை மறந்து, ஜாலியாக ரசித்து மகிழ்வார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

நகைச்சுவையும், திகிலும் கலந்த ஹாஸ்டல் திரைப்படத்தை கண்டு ரசிக்க வரும் ஞாயிறு, ஜுலை 24-ம் தேதி, பிற்பகல் 2.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here