Vanakkam! My heartfelt thanks for all the love & good wishes that has reached us & enriched our lives so far … We are ecstatic with the Five National awards for Soorarai Pottru. The overwhelming reception for our film which was released directly on OTT during a pandemic, has made our eyes well up in joy. Our happiness is doubled at this National recognition for Soorarai Pottru, as it is a testimony of Sudha Kongara’s many years of hard-work & creative vision of Captain Gopinath’s story. My heartfelt congratulations for the National award winners of our film – Aparna Balamurali (Best Actress), GVPrakash (Background score), Sudha Kongara & Shalini Usha Nair (Best Screenplay). My sincere appreciation and gratitude to all the talents who stood by us during the making of this good film. The Best Film award is a great recognition for team 2D and I thank them along with my best friend & CEO Rajsekar KarpoorasundaraPandian.

I extend my gratitude to Director Vasanth Sai & Filmmaker-Producer Maniratnam who placed their faith in my acting abilities and gave me my first film, Nerukku Ner. My heartiest congratulations to my fellow Best Actor winner Ajay Devgn and other National award winners from Tamilnadu, Filmmaker Vasanth Sai, Editor Sreekar Prasad, Actor Lakshmi Priya Chandramouli, Filmmaker Madonne Ashwin and other award-winners from other States of our country, for the year 2020, in this 68th National Film awards.

My special thanks to my Jyotika, who insisted I should produce & act in Soorarai Pottru.

My love and “Thank You” to all those who have encouraged my efforts so far and to my Amma & Appa, Karthi & Brinda, who have supported me always. I dedicate this award to my kids Diya and Dev and to my loving family.

I share this joyous moment with all my brothers and sisters who are out there, who have shown me immense love and acceptance right through my career. My heartfelt thanks to you all my #anbaanafans

The National Award gives me the motivation to work harder and walk my talk… and give you all good films, now & always. My sincere thanks to the Government of India and the National Awards Jury for this high recognition of our work.

I once again thank each and everyone of you for your love & good wishes.

Yours
Suriya

வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்..
என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..

அன்புடன்,
சூர்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here