முத்தையா இயக்கத்தில் கார்த்தி அதிதி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விருமன் .
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியாகியிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் செல்வகுமார்.

தன் அம்மாவின் இறப்புக்கு காரணமான
தன் தந்தை பிரகாஷ்ராஜை
சிறுக சிறுக டார்ச்சர் செய்து பழிவாங்குகிறார், தன் தாய்மாமா ராஜ்கிரண் வீட்டில் வளரும் கார்த்தி. பணம், கவுரவம் தான் பெரிது என்று வாழ்ந்து வரும் தாசில்தார் பதவி வகிக்கும் பிரகாஷ்ராஜை, நாலு புள்ள பெத்தேன், “நாலாவது நரகாசுரன வந்து வாச்சிருக்கு ” என்று புலம்ப வைக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திரங்கள். ராஜ்கிரண் சிங்கம்புலி, சூரி, ஆர்கே சுரேஷ், கருணாஸ், ஓ.சுந்தர், மனோஜ் பாரதிராஜா, இளவரசு என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் ஒவ்வொருவருடைய கதாபாத்திரமும் மனதில் பதிகிறது. கதாபாத்திரம் மட்டுமல்லாமல் கதாபாத்திரத்தின் பெயர்களும் அவற்றின் பின்னணியும் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது.

கிராமத்து கதாபாத்திரங்கள் என்றாலே கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போல், புகுந்து விளையாடி இருக்கிறார். கார்த்திக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் தேனி பெண்ணாக புகுந்து கலக்கியிருக்கிறார் அதிதி சங்கர்m இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் நம்பும்படியாக இல்லை. நடனம், உணர்ச்சிபூர்வமான நடிப்பு என அனைத்திலும் ஒரு முதிர்ந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் அதிதி சங்கர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை திரையரங்கில் ரசிகர்கள் எழுந்து ஆட வைக்கிறது. குறிப்பாக ‘கஞ்சாப்பு கண்ணாலே’ பாடல் அதிரடி வெரைட்டி. பின்னணி இசையிலும் தன்னுடைய இசை ராஜாங்கத்தை சிறப்பாக நிலைநாட்டி இருக்கிறார் யுவன்.

கிராமத்து மண்வாசனையை, நம் கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.

கிராமத்து படத்தை தற்கால ட்ரெண்டுக்கு ஏற்றாற் போல தயார் செய்த ரசிகர்களுக்கு பரிமாறியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. விருமன் ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு கிராமத்து படமாக வெளியாகியுள்ளது.

விருமன் அதிரடி கிராமத்து சரவெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here