தன்னுடைய கணவரின் லட்சியத்துக்காக, தன் மகனை ஒரு குத்துச்சண்டை வீரராக்கவேண்டும் என்ற ஒரு தாயின் போராட்டம்தான் லைகர். குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டாவும், அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவை உலகின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரனாக உருவாக்க வேண்டும் என்பதற்காக, தன் கணவரிடம் தோற்ற ரோனித்ராயிடம் பயிற்சி பெற வைக்கிறார். எந்த கவனச்சிதறலும் இல்லாமல் முழுமையாக குத்துச்சண்டையில் கான்சென்ட்ரேட் செய்யவேண்டும் என்று ரோனித்ராய் சொல்ல, அதற்குமாறாக எதிர் அணியின் குத்துச்சண்டை வீரரின் தங்கையான அனன்யா பாண்டே மீது விஜய் தேவரகொண்டாவுக்கு காதல் வருகிறது. இதற்கிடையில் உலக சாம்பியனும் தன்னுடைய மானசீக குருவான மைக்டைசனுடன், குத்துசண்டை மோடையில் மோதும் வாய்ப்பு விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்படுகிறது. அனன்யாவுடனான காதல், இந்திய எதிரிகள், உலக எதிரிகள் அனைவரையும் எப்படி வெற்றி கொண்டார் என்பதே லைகர் படத்தின் கதை.
படம் முழுக்க ரசிகர்களை கட்டிப்போடுவது விஜய் தேவரகொண்டாதான். சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கிறது. இயக்குனர் பூரி ஜகன்நாத் அவர்களுக்கு ஆக்சன் படங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல, அவரின் வழக்கமான ஆக்சன் ஃபார்முலா இப்படத்திலும் கைகொடுத்துள்ளது. அனன்யா பாண்டே அழகாக இருக்கிறார், விஜய் தேவரகொண்டாவுடன் மோதல் காதல் என படத்தின் காதல் போர்சனுக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.
ஆக்சன் படங்களுகேற்ற அருமையான ஒளிப்பதிவு, அதிரடியான பின்னனி இசை, படத்தொகுப்பு என டெக்னிக்கல் விசயங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. அதிரடி ஆக்சன் ஃபிலிம் ரசிகர்களுக்கு லைகர் ஒரு மிகச்சிறந்த விருந்தாக இருக்கும்
லைகர் அதிரடி டைகர்