The latest premiere of ZEE5 ‘Yaanai’ starring Arun Vijay in the lead role, directed by Hari, has scaled 100 Million streaming minutes in a short span of time.
Arun Vijay starrer “Yaanai”, which premiered last week (August 19, 2022) on ZEE5, has created a stupendous record of crossing 100 Million streaming minutes in a shorter period. The movie, which earned positive reviews from both film critics and general audiences during its theatrical run, witnessed an excellent response with its OTT premiere now. Director Hari’s signature of creating a perfect entertainer encapsulating emotions, action, sentiments, romance, and ingredients that cater to the tastes of family audiences has seen a promising reception. Besides, the colossal performance of Arun Vijay and other actors, followed by excellent technical works comprising a musical score by GV Prakash Kumar, embellished the entertaining essence of this movie.
Commenting on the success, Manish Kalra, Chief Business Officer, ZEE5 India said “At ZEE5, our effort is to make popular content available in the preferred language of our viewers. We take pride in focusing on storytelling and Yaanai has a unique narrative. We are enthused by the response the film has received so far within a short span of time, and it encourages us to continue delivering real and relatable entertainment to our audiences.”
ZEE5, which has already stocked up a wide array of content-driven Original series, blockbusters, and critically acclaimed movies, is delighted over the grand success of ‘Yaanai’. ZEE5 has already garnered a good response from families for its proficiency in delivering the best content at an affordable price tag. Moreover, it has significantly proved its top-notch caliber of creating Original series based on different genres including Vilangu, Anantham, Fingertip, and the recent release Paper Rocket, directed by Kiruthiga Udhayanidhi.
Following the grand success of ‘Yaanai’, ZEE5 will soon unveil its new lineups of Originals and movies.
அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.
ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில் திரையிடப்பட்ட, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம், குறுகிய காலத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளது. இத்திரைப்படம், திரையரங்கில் வெளியான போதே விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பலத்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடதக்கது. இப்போது ஓடிடி பிரீமியரில் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாசம், ஆக்சன், சென்டிமென்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இது தவிர, அருண் விஜய் மற்றும் நட்சத்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனம் மயக்கும் இசையமைப்பு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு இந்த படத்தினை வெகுவாக அழகுபடுத்தியுள்ளது.
படத்தின் வெற்றி குறித்து ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறியதாவது.., “ஜீ5 இல், எங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அவர்களுக்கு விருப்பமான மொழியில் பிரபலமான படைப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம். சிறந்த படைப்புகளை வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் முழுக்கவனத்தை செலுத்துகிறோம் என்று பெருமிதம் கொள்கிறோம். யானை ஒரு தனித்துவமான கமர்ஷியல் படம். குறுகிய காலத்திற்குள் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது, மேலும் இந்த வெற்றி எங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கை தொடர்ந்து வழங்க எங்களை ஊக்குவித்துள்ளது.
ஜீ5 தளம் ஏற்கனவே சிறந்த உள்ளடக்கம் கொண்ட ஒரிஜினல் தொடர்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களின் பரவலான வரிசைகளை கொண்டுள்ளது. தற்போது ‘யானை’ படத்தின் மாபெரும் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. ஜீ5 மலிவு விலையில் சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவதில் அதன் நிபுணத்துவத்திற்காக குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விலங்கு, ஆனந்தம், ஃபிங்கர்டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என பல்வேறு ஜானர்களில் அசல் தொடர்களை உருவாக்கி வழங்குவதில் தனது சிறந்த திறனை நிரூபித்துள்ளது.
‘யானை’யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜீ5 அதன் ஒரிஜினல் மற்றும் புதிய திரைப்படங்களின் அடுத்த வரிசைகளை விரைவில் வெளியிடவுள்ளது.