தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ” 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர், நடிகையர், இயக்குனர்கள் , ஏனைய தொழில் நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளையும், பரிசுத்தொகையினையும் வழங்கிடவும், 2015 முதல் 2021 ஆண்டு வரையிலான விருதுகளுக்காக தேர்வு செய்திட குழு அமைத் திடவும் மேலும்
சிறு முதலீட்டு படங்களில் தமிழக அரசின் மானியத்திற்காக
2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளுக்காக விண்ணப்பித்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானியத்தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வில் விளக்கேற்றிட வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வேண்டுகோள் வைத்தோம்.

மக்கள் அனைவரையும் ஒரு சேர அரவணைத்து செல்லும் நம் முதல்வர் அவர்கள் முதல் கோரிக்கையை நிறைவேற்றி ஆணை பிறப்பித்துள்ளார்.

வாழும்போதே வரலாறாக வாழ்ந்துவரும் நம் முதல்வர் அவர்கள் நமது அடுத்தடுத்த கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை திரை உலகினரிடம் நிறையவே உள்ளது.
தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் ஒட்டுமொத்த தமிழ் திரைஉலகம் சார்பிலும் இருகரம் குவித்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழக அரசின் விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here