தனது லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் ஓர் இஸ்லாமிய இளம்பெண்ணின் வெற்றிக் கதையே ’ஜமீலா’ தொடர்!
–அக்டோபர்- 10_ம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது

சென்னை, செப்.8–
ஓர் இஸ்லாமிய இளம்பெண் தனது லட்சியக் கனவை நனவாக்கிக்கொள்ள, யதார்த்த வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளை மீறி, உள்ளார்ந்த ஆர்வத்தோடும் உத்வேக முனைப்போடும் எவ்வாறு வெற்றிகரமாகப் பயணிக்கிறாள் என்பதே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், அக்டோபர் 10-ம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் ‘ஜமீலா’தொடரின் கதை. தமிழ்நாட்டின் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனலாகத் திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ஜமீலா தொடருக்கான இரண்டாவது புரோமோவை வெளியிட்டுள்ளது.
‘ஜமீலா’ தனது இனிய குரலால் பாடல் பாடியே இந்த வாழ்க்கையை அற்புதமாக்க விரும்புகிறாள்; அர்த்தமுள்ள கொண்டாட்டமாக மாற்ற முயலுகிறாள். ஆனால், கடந்தகாலத்தில் அவளது குடும்பம் சந்தித்த ஒரு துன்பமான நிகழ்வு, ஜமீலாவைத் தன் லட்சியக் கனவை நோக்கிப் பயணிக்கவிடாமல் தடுக்கிறது. எனினும் எல்லா இடர்களையும் எதிர்கொண்டு ஒரு வெற்றிபெற்ற பெண்ணாக இந்த உலகுக்கு தன்னை முன்னிறுத்துகிறாள் ஜமீலா என்கிற லட்சியப் பெண்.
தற்போது வெளியாகியுள்ள ஜமீலா தொடரின் இரண்டாவது புரமோவில் ஜமீலா வெளியுலகில் மிகவும் மகிழ்ச்சியாக வலம்வருவதோடு, இந்த உலகையே தன் மேடையாக்கி, தனது இனிமையான குரலால் பாடும் ஜமீலாவைப் பாடல் பாட வேண்டாம் என அவளது தாய் சலீமா எச்சரிக்கிறாள். ஜமீலா தனது தந்தை ஹனீபாவைப் பார்க்கிறாள். அப்போது தீ பிடித்து எரியும் ஒரு வீட்டில் இருந்து இரண்டு பேர் வெளியே ஓடி வருவதுபோல பழைய நினைவுகள் வந்து போகின்றன.
’ஜமீலா’வாக நடிகை தன்வி ராவ் நடித்திருக்கிறார். ஜமீலாவின் அம்மா சலீமாவாக தனது அனுபவம் கலந்த அற்புத நடிப்பைத் தந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். அப்பா ஹனீபாவாக அசத்தல் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார் மேஜர் கௌதம்.
நொடிக்கொரு மாறும் வாழ்க்கையில் மாயாஜாலத்தை உருவாக்க ஒவ்வொரு பெண்ணும் துன்பங்களை எதிர்கொண்டு, தடைகளைத் தாண்டிவந்தால் வாழ்க்கையில் தங்கள் லட்சியக் கனவை நனவாக்கலாம் என்பதை `ஜமீலா’ தொடர் வலியுறுத்துகிறது.
ஜமீலா தனது லட்சியப் பயணத்தில் அனைத்துத் தடைகளையும் தாண்டி எப்படி வெற்றிபெறுகிறாள் என்பதைக் காணும் புதிய அனுபவத்துக்கு இப்போதே தயாராகுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here