சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் *

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரிவுத் தலைவராக பணியாற்றிய திரு.ஷண்முகம் @ ஷம்மி ( வயது 52) காலமானார்.

உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த திரு.ஷண்முகம் @ ஷம்மி சிகிச்சை பலனின்றி சென்னையில்
இன்று (10-09-2022) இயற்கை எய்தினார் .

நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக பணியாற்றி வந்த திரு.ஷண்முகம்
நியூஸ் 7 தமிழின் பேசும் தலைமை, பீனிக்ஸ் மனிதர்கள் போன்ற வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார்.
தனது சிறப்பு குரல் வளத்தால் ஊடக உலகில் தனி இடம் பிடித்த ஊடகவியலாளர் திரு.ஷண்முகத்தின் மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

துயரங்களுடன்
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
10-09-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here