Nagarjuna’s action-thriller ‘Ratchan – The Ghost’, in which he plays an Interpol officer, will release in the first week of October.

Directed by Praveen Sattaru, the director of hits like ‘PSV Garudavega’ and ‘Chandamama Kathalu’, ‘Ratchan – The Ghost’ is a mega-budget film jointly produced by Sri Venkateswara Cinemas LP and Northstar Entertainment Banners.

While every big movie aims to attract Pan-Indian audience nowadays, Actor Nagarjuna has been releasing his films in other state languages ​​for more than 20 years now. This is the main reason behind his huge fan base across the nation.

Nagarjuna is back on the Tamil screen with ‘Ratchan’ after his 2016 blockbuster ‘Thozha’. Nagarjuna will be portraying Vikram, a highly trained and extremely lethal Interpol officer. This will be a never seen before intense character for Nagarjuna.

The teaser and trailer of the film which was released last month have been well received by the fans. The trailer of the film has crossed 10 million views and counting.

Sonal Chauhan of ‘Dictator’ and ‘Ruler’ fame has been cast as female lead opposite Nagarjuna. Gul Panag and Anika Surendran also play vital roles. Mukesh G has handled the cinematography, while Dinesh Subbarayan and Kecha have designed the fight sequences. Mark K Robin, who composed for films like ‘Agent Sai Srinivas Athreya’ and ‘Shambi Reddy’, has given the background score for ‘Ratchan’.

With full on action combined with other commercial elements this film be released as a Dussera treat and will hit the theaters in the first week of October. It will be released along the telugu version ‘The Ghost – Killing Machine’. It is to be noted and remembered that 33 years ago, in 1989, Nagarjuna’s ‘Shiva’ directed by Ram Gopal Varma released in the first week of October and became a trendsetter and is still regarded as one of the best.

அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’

நாகார்ஜுனா இன்டர்போல் அதிகாரியாக நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ’இரட்சன் – தி கோஸ்ட்’ அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது.

‘பிஎஸ்வி கருடவேகா’, ‘சந்தாமாமா கதலு’ உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் பிரவீன் சத்தாரு இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் நார்த்ஸ்டார் எண்டர்டெய்மெண்ட் பேனர்ஸ் இணைந்து, பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ’இரட்சன் – தி கோஸ்ட்’.

தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் படங்களின் தயாரிப்பும், வெளியீடும் தற்போது மாறியுள்ளது. நடிகர் நாகார்ஜுனா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்படங்களை மற்ற மாநில மொழிகளிலும் வெளியிட்டு அதன் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர்.

2016ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தோழா’ திரைப்படத்துக்குப் பிறகு நாகார்ஜுனா மீண்டும் ’இரட்சன்’ மூலம் தமிழ் திரைக்குத் திரும்பியுள்ளார். இதில் தான் இதுவரை ஏற்று நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில நாகார்ஜுனா நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்கள் அளித்துள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் படத்தின் ட்ரெய்லர் பெற்றுள்ளது.

நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக, ’டிக்டேடர்’, ’ரூலர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சோனல் சவுகான் நடிக்கிறார். குல் பனாக் மற்றும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் சுப்பராயன் மற்றும் கேச்சா இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ’ஏஜன்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’, ’ஸாம்பி ரெட்டி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த மார்க் கே ராபின், ‘இரட்சன்’ படத்துக்கான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார்.

பரபரப்பான ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என அத்தனை கமர்சியல் அம்சங்களும் நிறைந்த இந்தப் படம் தஸரா வெளியீடாக, அக்டோபர் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் ’தி கோஸ்ட் – கில்லிங் மெஷீன்’ என்கிற பெயரில் அதே சமயத்தில் வெளியாகிறது. 33 வருடங்களுக்கு முன், 1989ஆம் ஆண்டு, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்த ஷிவா திரைப்படம், அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • johnson

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here