வில்லேஜ் ஸ்டுடியோஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் C.முருகன் அன்னை K.செந்தில்குமார் இருவரும் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ” குளவி ” என்று பெயரிட்டுள்ளனர்.

வில்லன் கதாபாத்திரமானாலும் சரி நாயகன் கதாபாத்திரமானாலும் சரி எந்த கதாபாத்திரமானாலும் தனது அசாத்திய நடிப்பால் இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள R.K. சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சசிகுமார் ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த அமீரா வர்மா நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிஸ்தா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயன் முனுசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த யதார்த்த இசையமைப்பாளர் N.R. ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடல்கள் – கபிலன், மோகன்ராஜ்
எடிட்டிங் – மு. காசிவிஸ்வநாதன்.
நடனம் – ராதிகா, சக்தி ராஜு.
ஸ்டண்ட் – ஹரி முருகன், ஷங்கர்
நிர்வாக தயாரிப்பு – நிமல்
தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – C. முருகன், அன்னை K. செந்தில் குமார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – V.S.செல்வதுரை.

இவர் எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குனர்கள் A.R.முருகதாஸ் , சித்து ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு ஏராளமான படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் V.S.செல்வதுரை கூறியதாவது…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். அந்த மக்களின் கலாச்சாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம். குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்ல இருக்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் முக்கியத்துவம் எப்படி இருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லும் படம் இது.

நகைச்சுவையுடன் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை பற்றிய படமாக இதை கொடுக்க இருக்கிறோம்.

படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்றார் இயக்குனர் V.S. செல்வதுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here