Akkineni Naga Chaitanya’s Telugu-Tamil bilingual project under the direction of leading filmmaker Venkat Prabhu has seen making headlines once again. Kirthi Shetty will be playing the female lead in the film. With the announcement of the ensemble cast and the brilliant technical department, the film has generated massive buzz.
Now the makers delighted fans and movie lovers with the striking pre-look. In the pre-look, Naga Chaitanya will be seen as police officer with the fierce look on his face.
He is seen locked down in the hands of his fellow officers, who have been seen using force and guns to restrain his rage. This intense look has heightened anticipation for the first look, which will be released on November 23rd at 10:18 AM as a birthday surprise for Chaitanya.
Touted to be a action entertainer, the bilingual movie will have high production values. Maestro Ilaiyaraaja and Little Maestro Yuvan Shankar Raja will compose music for this movie, produced by Srinivasaa Chitturi under Sriniivasaa Silver Screen banner. Pavan Kumar presenting the film.
The film also stars Arvind Swami, Priyamani, Sampath, Sarathkumar, Premji, Vennela Kishore, Premi Vishwanath, among others. The film marks Venkat Prabhu’s entry into the Telugu Film Industry, it will also be the Naga Chaitanya’s entry into Kollywood.
NC22 ப்ரீ லுக்: நாக சைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டல்
இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘NC22’-ல் அக்கினேனி நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கேப்டன் கூல்’ இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இருவரும் படத்தின் ப்ரீ-லுக் வெளியீட்டு தேதியை காணொளியில் அறிவித்துள்ளனர். பார்வையாளர்களை கவரும் விதமான இந்த ப்ரீ-லுக் இன்று வெளியாகியுள்ளது.
இந்த ப்ரீ லுக்கில் நாக சைதன்யா தீவிரமான காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவரது வேகத்தையும் தீவிரத்தையும் மட்டுப்படுத்தும் விதமாக சக போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் ஃபோர்ஸூடன் இந்த ப்ரீ லுக்கில் உள்ளனர். மேலும், நவம்பர் 23 அன்று காலை 10.18-க்கு வெளியாக இருக்கும் முதல் பார்வைக்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்த ப்ரீ-லுக் அமைந்துள்ளது.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி படத்திற்கு வசனங்கள் எழுத SR கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பவன் குமார் இந்த படத்தை வழங்குகிறார்.