தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது என்பதை இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கை இன்றும் வரும் காலத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வழிநடத்த உதவும்.

இன்று புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வரக்கூடிய ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்க வேண்டும் என்று எண்ணி தன் பயணத்தை ஆரம்பித்தார்.

பலவிதமான டயட், ஜிம்மில் தீவிரமான வொர்க்கவுட்ஸ் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை ரம்யாவை ஒரு தசாப்தமாக பாதித்து இருந்தது. இதற்கிடையில், ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். ஆனால், இந்த புகழ் வெளிச்சமும் அவரை மீண்டும் இந்த கேலிக்குள் தள்ளியது. இதெல்லாம் தன் வாழ்க்கை மீது ரம்யா கட்டுப்பாடு எடுக்கும் வரைதான்.

இன்று ரம்யா முன்னெப்போதும் விடவும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதை எப்படி அவர் சாதித்தார் என்பதைதான் Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தன் சொந்த அனுபவம், செய்த தவறுகள், வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் ஃபிட்னெஸ் பயணத்தில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை கவனித்து ரம்யா பகிர்ந்திருக்கக்கூடிய இந்த விஷயங்கள் ஃபிட்னெசில் ஆர்வம் காட்டி துவங்க விரும்புபவர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

உடற்பயிற்சியின் மீதும், டயட் உணவு முறைகளின் மீதும் காலங்காலமாக இருந்து வரும் தவறான நம்பிக்கைகளை உடைப்பதுடன், போலியான வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காமல் பாதுகாப்பான வழிமுறைகள் மூலம் வாசகர்களை வழிநடத்துகிறார். இதில் உள்ள வழிமுறைகளும் உடற்பயிற்சி முறைகளும் நிச்சயம் வாசகர்களை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு இந்த புத்தகம் பற்றி தனது சமூக வலைதளங்களில் ட்வீட் செய்து பகிர்ந்திருப்பதாவது, “என்னுடைய அன்பான தோழி ரம்யா புத்தகம் எழுதி இருக்கிறார். பென்குயின் இந்தியா இந்த புத்தகத்தை பப்ளிஷ் செய்துள்ளது. இந்த ஃபிட்னெஸ் சூப்பர் ஸ்டார் ரம்யா உடற்பயிற்சியில் தன் மொத்த அனுபவத்தையும் இதில் தொகுத்துள்ளார். வாழ்க்கைப் பாடம், தவறுகள் மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் மூலம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர் நடத்தி வருகிறார். எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்த்துகள்!”.

இந்தியன் கிரிக்கெட் அணியின் பலமும் கண்டிஷனிங் கோச்சுமான பாசு ஷங்கர், “ரம்யாவால் எழுதப்பட்ட Stop Weighting புத்தகம் உண்மையாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் உள்ளது. இது நிச்சயம் புதியவர்களை வழி நடத்தும்” என்கிறார்.

ரம்யா கூறும்போது, “இது என்னுடைய முதல் புத்தகம். இதில் என்னுடைய மொத்த ஆன்மாவையும் கொடுத்துள்ளேன். இது வெறும் ஃபிட்னெஸ் வழிகாட்டியோ என்னுடைய நினைவுக் குறிப்போ மட்டுமல்ல, இது இரண்டையும் விட இன்னும் பெரிதாக இருக்கும் என நம்புகிறேன். ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட என் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் உண்மையாக தெரிவித்து இருக்கிறேன். என்னுடைய இந்த புதிய பயணத்தில் உங்கள் அனைவரது அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்”.

எழுத்தாளர் பற்றி:

ரம்யா சுப்ரமணியம் ஒரு பிரபலமான தொகுப்பாளர், நடிகை மற்றும் தமிழ்நாடு, சென்னையில் ஒரு ஃபிட்னெஸ் ஐகான். Stay Fit With Ramya-வின் நிறுவனர் ஆவார். உலகம் முழுவதும் உள்ள இந்தியப் பெண்களுக்கு ஆரோக்கியமான வழிமுறைகள், ஃபிட்னெஸ் மற்றும் நியூட்ரிஷியன் புரோக்ராம்களை தன் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூகவலைதளம் மூலம் கொடுத்து வருகிறார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான எடைத் தூக்குதலில் (powerlifting) கோல்ட் மெடல் வென்றிருக்கிறார். கடந்த வருடம் நியூயார்க் IIN-ல் சர்டிஃபிகேஷன் கோர்ஸ் முடித்ததற்காக CPD கிரெடிட்ஸூம் பெற்று, ஒருங்கிணைந்த ஹெல்த் கோச்சாக உள்ளார்.

பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பற்றி:

பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா ஒவ்வொரு வருடமும் 250க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகளை வெளியிடுகிறது மற்றும் இதன் பட்டியலில் 3000க்கும் மேற்பட்ட தலைப்புகளையும் வைத்திருக்கிறது. சரிதை, பயணம், வியாபாரம், அரசியல், வரலாறு, மொழி மற்றும் தத்துவம், லைஃப்ஸ்டைல், சமையல், உடல்நலம், உடற்பயிற்சி, விளையாட்டு, விஷுவல் புத்தகம் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என வலுவான ஃபிக்‌ஷன் மற்றும் நான்- ஃபிக்‌ஷன் பிரிவுகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியாவின் புகழ்பெற்ற பட்டியலில் புக்கர் பரிசு பெற்ற நாவல்கள் மற்றும் நோபல் பரிசு, மகசேசே விருது, ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருது, காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசு மற்றும் தேசிய திரைப்பட விருது உட்பட ஒவ்வொரு முக்கிய இலக்கியப் பரிசுகளையும் வென்றவர்கள் உள்ளனர்.

PRHI இன் பல ஆசிரியர்கள் பாரத ரத்னா மற்றும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விபூஷண் ஆகியவற்றையும் பெற்றுள்ளனர்.
பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, இந்தியா மற்றும் துணைக் கண்டத்தில் உள்ள பல முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச பதிப்பகங்களுக்கான பிரத்யேக விநியோக பார்ட்னராகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here