செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் ஆகியோர் நடிப்பில் , பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் ரவிதேஜா தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் கட்டா குஸ்தி. விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், இப்படம் தனித்திருப்பது பாராட்டுக்குறியது.  விளையாட்டை மட்டுமே மையப்படித்திய படம் என்று இல்லாமல் ஒரு மிக முக்கிய சமூக பிரச்சினையையும் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒருபுறம் பாலக்காட்டில் பெயர் பெற்ற கட்டா குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்யா லட்சுமிக்கு, திருமணம் செய்துவிடவேண்டும் என தீவிரமாக அவர் பெற்றோர் முயற்சித்து வருகின்றனர், ஆனால் இவர் கட்டா குஸ்தி வீராங்கனை என்பதாலேயே திருமணம் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. மற்றொரு புரம், வீடு, வாசல் , தோட்டம் என்று வசதியாக இருந்து கொண்டு தெனாவட்டாக திரியும் பாத்திரம் விஷ்னு விஷால். தான் திருமணம் செய்யப்போகும் பெண், தனக்கு அடங்கி நடக்கவேண்டும், நீளமான கூந்தல் வைத்திருக்க வேண்டும் என அக்மார்க் ஆணாதிக்க மனப்பான்மையில் இருக்கும் விஷ்ணு விஷாலுக்கும், கட்டா குஸ்தி விளையாட்டில் எதிராளிகளை தூக்குப்போட்டு வெளுக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சொல்லி சமாளித்த சில பொய்களால் திருமணம் நடைபெறுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கட்டா குஸ்தி படத்தின் கதை

முண்டாசுப்பட்டி, ராட்சசன், இன்று நேற்று நாளை போன்ற வெற்றிப்படங்களின் வரிசையில் விஷ்ணு விஷாலுக்கு மேலும் ஒரு வெற்றிப்படம் கட்டா குஸ்தி. கதாபாத்திரத்தை ரசித்து ரசித்து நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால், 80ஸ் கிட்ஸ் போல பேசினாலும் இப்படம் ஒரு 2கே கிட்ஸ்க்கான படம் என்பதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் இறங்கி அடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் இது ஏதோ ஐஸ்வர்யா லட்சுமி காலம் போல, அடுத்தடுத்து மக்கள் மனதில் பதியும் பாத்திரங்களாகவே அமைந்து வருகிறது. குஸ்தி வீராங்கனையாக கலக்கி இருக்கிறார். விஷ்ணு விஷாலின் மாமாவாக வரும் கருணாஸ், ஐஸ்வர்யாவின் சித்தப்பாவகவரும் முணீஸ் காந்த், காளி வெங்கட் என படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் காமெடியன்கள் என ஒதுக்கி விடமுடியாதபடி ஒவ்வொரு காதாபாத்திரங்களுக்கும் காமெடியை தாண்டி எமோசனல் பக்கங்கள் இருப்பது சிறப்பு.

தமிழ்நாட்டின் மேற்கு எல்லை மற்றும் பாலக்காடு பகுதிகளின் பசுமை கொஞ்சும் பகுதிகளை நம் கண்களுக்கு குளிச்சியாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம் நாதன். அருமையான படல்கள், பின்னணி இசை, அதிரடியாக எடிட்டிங் என்று டெக்னிக்கல் விசயங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

படம் ஒரு மிக முக்கிய சமூக பிரச்சினையை பற்றி சொன்னாலும் துளியும் பிரச்சார நெடி இல்லாமல் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம், பொதுவாக பெண்ணுரிமை குறித்து பேசும் படங்கள் சற்று வறட்சியாக, அறிவுரை சொல்லும் தொணியில் அமைந்திருக்கும் ஆனால் அதை உடைத்து, முழு நீள வெகுஜன படத்தில் பெண்ணியம் குறித்து பேசி இருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு

கட்டா குஸ்தி கலக்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here