Dr J Radhakrishnan IAS, film personalities and celebrities attend 30th anniversary celebrations

Classic Kitchen is one of the best recognised interior decorators in Chennai. The company which is considered to be among the frontrunners in reshaping interior designing sector is aiming to reshape the life of children in need as well.

As part of its 30th anniversary celebration, Classic Kitchen has shortlisted 30 children and will be providing livelihood and educational aid to them.

These 30 include special children, wards of differently-abled persons and children who are not able to meet their daily needs.

Classic Kitchen Founder and Chairman Suresh Babu Babuji said that the 30th anniversary event which was held in Chennai was more like a thanksgiving meet to those who are travelling with the organisation for all these years.

“This is more like a family function. I started the company individually in 1992 and now we have more than 300 employees,” he said. The company is set to venture into construction and other sectors soon, he added.

Tamil Nadu Cooperation, Food and Consumer Protection Department Principal Secretary Dr J Radhakrishnan IAS along with his wife Kiruthiga Radhakrishnan, Director S A Chandrasekar and his wife Shoba Chandrasekar, Chefs Dhamu and Adrian Lambert, actors Besant Nagar Ravi and Anukreethy Vas, Gym Trainer Bharath and Shilpa were among those who attended the function.

30 குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் படிப்பு செலவை ஏற்று 30-வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், திரைப்பட பிரபலங்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் 30-வது ஆண்டு விழாவில் பங்கேற்பு

தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகளின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிளாசிக் கிச்சனின் 30-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, 30 குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் கல்வி உதவிகளை வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த 30 பயனாளிகளில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகள் ஆகியோர் உள்ளனர்.

கிளாசிக் கிச்சன் நிறுவனர் மற்றும் தலைவரான சுரேஷ் பாபு பாபுஜி கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் இணைந்து பயணித்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றார்.

“இது ஒரு குடும்ப விழா போன்றது. 1992-ல் தனி ஆளாக இந்த நிறுவனத்தை நான் தொடங்கினேன். கிளாசிக் கிச்சனில் இப்போது 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்,” என்று அவர் கூறினார். கட்டுமானம் மற்றும் இதர துறைகளில் கிளாசிக் கிச்சன் விரைவில் அடி எடுத்து வைக்கவுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணன், திரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா சந்திரசேகர், சமையல் மன்னர்கள் தாமு மற்றும் ஆட்ரியன் லாம்பர்ட், நடிகர்கள் பெசன்ட் நகர் ரவி, அனுகீர்த்தி வாஸ், உடற்பயிற்சி நிபுணர் பரத் மற்றும் ஷில்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here