ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, ப்ரக்யா ஆகியோர் நடிப்பில், சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இப்படத்துக்கு ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார்

பொதுவாக ஜீவாவுக்கு காமெடிப்படங்கள் அதிக அளவில் கைகொடுத்துள்ளன. அந்த வகையில் நகைச்சுவைப்படமாக வெளியாகி இருக்கும் வரலாறு முக்கியம் படமும் ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக வெளியாகி, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளத்

கோயமுத்தூரில் குடியிருக்கும்  ஜீவாவுக்கு, அவர்கள் தெருவுக்கு புதிதாய் குடிவரும் காஷ்மீரா மீது காதல் வருகிறது. அதே போல் அவரது தங்கையான ப்ரக்யாவையும் காதலிக்கத் தொடங்குகிறார். காதலுக்காக பல்வேறு சேட்டைகளை செய்து காஷ்மீரா மனதில் இடம் பிடிக்கிறார். அதே நேரம் ப்ரக்யாவும் ஜீவாமீது காதல்வயப்பட, தான் காஷ்மீராவை காதலிப்பதாகச் சொல்லி அவர் மனதை மாற்றுகிறார். தன் மகள்கள் இருவரையும் துபாய் மாப்பிள்ளைக்குத்தான் திருமணம் செய்து வைப்பேன் என்ற முடிவுடன் இருக்கும் காஷ்மீரா, ப்ரக்யா ஆகியோரின் அப்பாவான சித்திக்கிற்கு, ஜீவா – காஷ்மீரா காதல் விவகாரம் தெரியவர, உடனடியாக காஷ்மீராவை துபாய் மாப்பிள்ளைக்கு கட்டிவைக்க முடிவெடுக்கிறார். ஜீவா காஷ்மீரா காதல் வென்றதா அல்லது துபாய் மாப்பிள்ளை காஷ்மீராவை திருமணம் செய்து கொண்டாரா என்பதே ‘வரலாறு முக்கியம்’ படத்தின் கதை

ஜீவா நடிப்பில் வெளியாகி, இன்றுவரை யூடியூப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்காக இருக்கும் ‘கவலை வேண்டாம்’ பட பாணியில், இளைன்கர்களை குறிவைத்து கிளுகிளுப்பு வசனங்களுடன் வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு இளைஞர்களிடம் வரவேற்பு நன்றாகவே உள்ளது. அந்த வகையில் படத்தின் இயக்குனர் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம்

ஜீவாவுக்கு இது போன்ற கதாபாத்திரங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல, காமெடியில் கலக்கி இருக்கிறார். படம் முழுக்க ஜீவாவுடன் காமெடி செய்திருக்கிறார் விடிவி கணேஷ். கே.எஸ் ரவிக்குமார், சரண்யா, சித்திக் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஜீவாவுக்கு ஜோடியாகவரும் காஷ்மீரா கதாபாத்திரம் அமைதியான கவர்ச்சி என்றால், கஷ்மீராவின் தங்கையாகவரும் ப்ரக்யா அதிரடி கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

ஷான் ரகுமான் இசையில் பாடல்கள் கலக்கலாக இருக்கின்றன. படம் முழுக்க ஜாலி ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பது நன்றாக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது

வரலாறு முக்கியம் – ஜாலி டைம்பாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here