நிஹால், அனந்த் நாக்,  சிரி ப்ரகலாத் ஆகியோர் நடிப்பில், ரிஷிகா சர்மா இயக்கத்தில் விஆர்எல் ஃபிலிம் ப்ரொடெக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் விஜயானந்த். இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

சமீபகாலமாக இந்திய திரையுலகில், பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களின் பயோ பிக் படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்த விஜய் சங்கரேஸ்வரின் பயோ பிக் படமான விஜயானந்த் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

ஒரே ஒரு லாரியுடன் தன் தொழில் நிறுவனத்தை தொடங்கிய விஜய் சங்கரேஸ்வர் இன்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துந்துகள் என ஒரு மிகப்பெரிய ட்ராண்ஸ்போர்ட் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். அவருடைய கதையை திரைமொழிக்கு ஏற்ப மாற்றி சிறந்த படமாக கொடுத்துள்ளார் பெண் இயக்குனர்  ரிஷிகா சர்மா.

1960களில் தொடங்கும் கதை ஒவ்வொரு பத்தாண்டுகளாக கடந்து படிப்படியாக நகர்கிறது. ஒரு மிகச்சிறிய ப்ரிண்டிங் பிரஸ்ஸில் தன் தந்தைக்கு உயவியாளராக இருக்கும் விஜயானந்த், தன் தந்தையின் தொழிலை மேம்படுத்துவதற்காக ஆட்டோமேடிக் மெஷினை வாங்கி பயன்படுத்துகிறார். அதன் பிறகு லாரி ஒன்றை வாங்கி ட்ராண்ஸ் போர்ட் நிறுவனத்தை தொடங்குகிறார். ஆனால் போட்டியாளர்களால் பல்வேறு சிகல்கள் வர, பல்வேறு போராட்டங்களுகுக்ப்பிறகு எப்படி ஒரு மிகப்பெரிய ட்ராண்ஸ் போர்ட் சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் என்பதே கதை.

விஜயானந்த் கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நிஹால், நிஜ விஜய் சங்கரேஸ்வரை கண்முன்னே நிறுத்தியுள்ளார். துளியும் மிகையில்லாத நடிப்பு, தனக்குதானே அதீத தன்னம்பிக்கை உடையவராகவும், மற்றவர்கள் பார்வைக்கு அகங்காரமாகவும் தெரிவதாகவும் நடித்துள்ளார். அதே போல் விஜயானந்த் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனந்த் நாக் கதாபாத்திரம் மனதில் பதிகிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருடைய பாத்திரமும் தனித்தன்மையுடன் படைக்கப்பட்டிருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.

புதியதாய் தொழில் தொடங்கும் நபர்களுக்கு இப்படம் ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையைத் தரும் என்பது உண்மை

விஜயானந்த் – விடாமுயற்சி வெற்றிகளை குவிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here