வைகப்புயல் வடிவேலு, ஆனந்தராஜ், ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி நாராயணன் ஆகியோர் நடிப்பில், சுராஜ் இயக்கத்தில், லைக்கா புரெடெக்சன் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்

தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த காதாபாத்திரத்தின் பெயர் நாய் சேகர். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த பெயரை,  ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று  இப்படத்துக்கு டைட்டிலான வைத்திருக்கின்றனர் படக்குழுவினர். உண்மையிக் இப்படம் வடிவேலு ரிட்டன்ஸ் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு வடிவேலு மீண்டும் தன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் மிகச்சிறப்பாக வாழ்ந்த குடும்பம் வடிவேலுவுடையது, தற்போது குடும்பச் சூழ்நிலை சரியில்லாததால், வீட்டில் வளர்க்கப்படும் விலையுயர்ந்த செல்லப்பிராணி நாய்களை கடத்தி வைத்துக்கொண்டு, அதைத் திருப்பித்தர அதன் உரிமையாளர்களிடம் பணம் வாங்குவதை தொழிலாகவே செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேலுவின் பாட்டி, தங்கள் வீட்டில் ஒரு அதிர்ஷ்ட நாய் இருந்ததாகவும், அது இருதவரை குடும்பம் செல்வச்செழிப்பாக இருந்ததாகவும், வீட்டில் வேலை செய்து வேலைக்காரர் ஒருவர் அந்த நாயை கடத்திச் சென்றுவிட்டதால்தான் தற்போது குடும்பம் கஷ்டப்படுவதாகவும் சொல்கிறார். தங்கள் வீடில் இருந்து திருடப்பட்ட அதிர்ஷ்ட நாய் தற்போது ஐதராபாத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு அதை கடத்திவர திட்டமிடுகிறார் வடிவேலு. அந்த கடத்தல் திட்டமிட்டபடி நடந்ததா? வடிவேலு குடும்பம் மீண்டும் தலை நிமிர்ந்ததா என்பதே நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் கதை

இப்படம் பற்றி சொல்லும் போது, வடிவேலு கம் பேக் என்று சொல்வதை கேட்க முடிகிறது.   கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம் ஆனால் யூடியூம், ஃபேஸ்புக், மீம்ஸ் என்று எதைப்பார்த்தாலும் அதில் வடிவேலு இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறார், எப்போதும் ரசிகர்களுடனே இருந்து கொண்டிருப்பவருக்கு கம்பேக் என்று சொல்வது சற்றே நெருடல்தான். ஆயினும் மீண்டும் திரையரங்குகளில் வெள்ளித்திரையில் வடிவேலுவை பார்க்கும் அனுபவம் மிகச்சிறப்பு. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறர் வடிவேலு. அதே பழைய ஃபார்மில் இருக்கிறார். இப்படத்தில் நடிப்பதுடன் பாடல்களும் பாடி அசத்தியுள்ளார். கிங்ஸ்லி, சிவாங்கி இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைத்திருக்கின்றனர். குறிப்பாக வடிவேலுவுக்கு காமெடியில் டஃப் கொடுத்தவர் ஆனந்தராஜ்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அப்பத்தா, டீசண்டான ஆளு போன்ற பாடல்கள் மறுபடி மறுபடி கேட்கத்தூண்டும் ரகம். நகைச்சுவை படத்துக்குக்கேற்ற பின்னணி இசையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். கேமிரா, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு பலமாக இருக்கின்றன

நீண்ட நாட்களுக்குப்பிறகு, திரையரங்குகளில், ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து சிரித்து மகிழ்ந்ததை பார்க்க முடிகிறது

நாய் சேகர் ரிட்டன்ஸ் – வடிவேலு ரிட்டன்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here