பெறுநர்,
திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள்
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்,
தலைமை செயலகம், சென்னை.

கடித எண். 180 / தெ.ந.ச / 2022 நாள்:14.12.2022

பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் விளையாட்டுத்துறையில் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி,
தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்

(M.நாசர்)
தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here