“Anand Raj is the real hero in the recent release Naai Sekar Returns” – Director’s sensational speech
“Making a film for ‘Pan-Indian’ concept itself is an insane idea” – Director Ameer’s hard-hitting speech
“Udhayanidhi Stalin becoming a minister doesn’t affect people in anyway” – Director Ameer
Moon Pictures Producer Adham Bava has produced and directed the film ‘Uyir Tamizhukku’, which is getting released by blockbuster hit movie ‘Maanaadu’ fame Suresh Kamatchi of V House Productions.
Director Ameer plays the content-driven protagonist in this movie and Chandini Sridharan plays the female lead role. The others in the star-cast include Anandraj, Imman Annachi, Marimuthu, Raj Kapoor, Subramaniam Siva, Mahanadhi Shankar, Raja Simman, Saravana Sakthi and many more prominent actors, who are appearing in prominent characters.
Devaraj is handling cinematography and Ashok Charles is taking care of editing for this movie. Music director Vidyasagar is making his comeback after a small interval in the industry through this movie.
Pa. Vijay is penning lyrics for this film, which has political backdrop as the story premise with Balamurali Varman and Ajayan Bala writing dialogues.
With the film scheduled for the worldwide theatrical release shortly, the cast and crew of this film was present for the press meet at Prasad Lab. Filmmaker Ameer, who made his directorial debut with the movie ‘Mounam Pesiyadhey’ completes 20 years in the film industry. Marking this special occasion, the crewmembers of this film honoured him with a magnificent garland.
Director-Producer Adham Bava said, “This is the first time, Ameer is acting in a movie, produced by another banner. Everyone acclaims him as a content-driven star, but I would say, he is the HERO. There were lots of challenges during the process of materializing this film, which delayed the completion of the works. I would like to thank him for blindly trusting me on this project. I trusted him as well. With Suresh Kamatchi sir’s Midas-touch, the film’s calibre is sure to get elevated to a greater extent. The film has all commercial elements including action, comedy and entertainment factors. Anandraj is playing an important role in this movie. It is noteworthy that he is the lead actor in the recent release ‘Naai Sekar Returns’ for he has exhibited a fabulous performance. I am confident that his characterization and performance in this movie will be noticed and appreciated by all. Thank You.”
Actor-Director Saravana Sakthi said, “My directorial debut project had Adham Bava as the co-director. I am glad that today he has become a successful filmmaker and I am acting under his direction.”
Director Subramaniam Siva said, “I have played an important role in this movie. Ameer isn’t just the hero, but a romantic hero in this movie. So far, we would have seen him playing an aggressive angry man and a hero, who fights for justice, but he appears in a different dimension. He has showcased his other side of performance in a role that is interwoven with romance and political backdrops.”
Actor Imman Annachi said, “I play a role that is more like a set property that keeps moving alongside Ameer sir throughout the movie. Especially the scenes where Aamir is trapped in a bus for three days while shooting a fight sequence in this film, and the comical scenes with him during that time are all sweet memories. I am confident that Uyir Tamizhukku will garner phenomenal reception for Ameer’s spellbinding performance after his movie ‘Yogi’.”
Director-Actor Raj Kapoor said, “I think this is the first-ever movie event to have the men alone. Ameer has played a natural and pragmatic politician’s character in this movie, which is set against the political backdrops. He played a character that aims to win the elections so that he can get united with his soul mate. The scenes involving his smartness is making political moves will be gripping and riveting to watch. This film will be yet another great hit like Maanaadu for Suresh Kamatchi.”
Actor Anand Raj said, “Ameer is my close friend and it was a great experience working with him. He has carved a niche of excellence and clasped a unique stature in the industry. I am still craving to give better performances in every film, and am curiously waiting for such roles. This film, set in a political backdrop, doesn’t deal with the political satire alone, but owns a good story premise as well.”
Producer Suresh Kamatchi says, “The film’ title is close to my heart and is something that is relevant to the current scenario. Even I am getting my movies released by other distribution firms, but I decided to release this movie out of respect for Ameer. I would like to continue my journey with him, and this is just a beginning. Ameer and politics are inseparable. The combination of Ameer-Imman Annachi will be more like Sathyaraj-Goundamani combination in the movies.”
Actor Rajasimman said, “The film was under production for many days. If there was some other actor involved in this project, they would walked out, but Ameer remained firm and steady, thereby getting this project to the point of release. When I was suddenly asked to come for shooting without any prior intimation, I travelled all the way from Coimbatore to Chennai by two wheeler. I am so much attached to this project.”
Director-Actor Ameer said, “It’s been 20 years I stepped into the movie industry with my debut movie ‘Mounam Pesiyadhey’. Being in the industry for 20 years itself is a big achievement. I still carry the memories of my first press meet, where I stood nervous. When I was asked to speak bravely, few words I spoke had infuriated the film’s hero Suriya, and he didn’t talk to me for few days.
When I was looking out to direct a full-fledged political movie, I came across this story, which had some dissimilarities. Significantly, the film had a different title during the initial stages. When Suresh Kamatchi came forward to release this movie, I decided to give the title ‘Uyir Tamizhukku’ that I registered my directorial project. I felt this title would look befittingly apt for this project, and now it looks like a perfect title at this point of time.
I always love watching Anand Raj in the comedian role than a villain. He has such scenes in this movie. Just like Sivakarthikeyan-Soori duo, the combination between me and Imman Annachi has worked out very well in this movie. If this becomes successful, the combination will be continued in future as well. I have always admired Vidyasagar sir after Isaignani Ilaiyaraaja sir. He has strained a lot to give the best for this movie. The film has four songs including MGR songs.
I request everyone to watch this movie keeping aside the hatred and resentments on me. The film talks about the language, but doesn’t deal with the linguistic issues. The title became an essentiality with the recent issues like imposing Hindi and the arrival of North Indians into Tamil Nadu that is turning out to be an issue for the Tamil Language. I have not developed the aptitude to become a proper politician, but at the same time, will keep discussing and sharing my views about it.
I will be a content-driven hero forever. Cinema is a director’s medium and I want to break the myth that actors are the pillars of this industry. At the same time, we must celebrate actors as fans. If Udhayanidhi Stalin becomes minister, it is not definitely going to people.
Even the current trend of Pan-India popped up, Mani Ratnam’s Roja, Bombay and many movies proved its calibre. Hindi films like Sholay and Hum Aapke Hai Kaun successfully one year of theatrical run in Tamil Nadu theaters. Films like Kizhakku Seemaiyile, Autograph, Paruthiveeran and Subramaniam are nativity based movies. So I don’t believe in the concept of Pan-Indian idea.
I will be soon directing a movie under the production of Suresh Kamatchi’s V House Productions. Currently, I am involved in a project titled ‘Iraivan Miga Periyavan’ and on this completion, will kick-start this directorial project.”
அமீர் கதாநாயகனா ? கதையின் நாயகனா? ; உயிர் தமிழுக்கு மேடையில் நடந்த கலகலப்பான விவாதம்
சத்யராஜ்-கவுண்டமணி, சிவகார்த்திகேயன்-சூரி போல புதிதாக உருவாகும் அமீர்-இமான் அண்ணாச்சி காமெடி கூட்டணி
காதலுக்காக அரசியலில் ஜெயிக்க போராடும் அமீர்
உயிர் தமிழுக்கு டைட்டில் இந்த நேரத்தில் தேவையான ஒன்றுதான் ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஆனந்தராஜ் தான் ஹீரோ; பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர்
பான் இண்டியாவுக்கென படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் ; இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு
உதயநிதி அமைச்சர் ஆவதால் மக்களுக்கு பாதிப்பில்லை ; இயக்குநர் அமீர் கருத்து
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.
கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த 20 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவரை கவுரவிக்கும் விதமாக படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல.. கதாநாயகன் தான்.. இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டுவர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான்.. அதேசமயம் இந்த படம் உருவாகும் வரை என்னை அவர் நம்பினார்.. அவரை நான் நம்பினேன்.. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.. இந்தப்படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன.. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கூட ஹீரோ என்றால் அது ஆனந்தராஜ் தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்” என்று கூறினார்.
நடிகரும் இயக்குநருமான சரவண சக்தி பேசும்போது, “நான் முதன்முதலாக இயக்கிய நாயகன் படத்தில் ஆதம்பாவா இணை இயக்குநராக பணியாற்றினார். இன்று அவர் இயக்குநராக மாறி இருப்பதும் அவரது டைரக்ஷனில் நான் நடித்து இருப்பதும் சந்தோஷம் அளிக்கிறது” என்று கூறினார்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “இந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அமீர் கதாநாயகன் மட்டுமல்ல.. இந்த படத்தில் காதல் நாயகனாகவும் நடித்துள்ளார். இதுவரை அவரை கோபக்காரராக, அநீதிக்காக குரல் கொடுப்பவராக பார்த்திருப்போம். இதில் காதல் மற்றும் அரசியல் இரண்டிலும் பின்னிப்பிணைந்து நடித்து உள்ளதையும் பார்க்கலாம்” என்று கூறினார்.
நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குனர் அமீருடன் கூடவே பயணிக்கும் விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டு பட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. யோகி படத்திற்கு பிறகு இந்த உயிர் தமிழுக்கு திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும் என்று கூறினார்.
நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர் பேசும்போது, “அநேகமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் சினிமா மேடை இதுவாகத்தான் இருக்கும். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு எதார்த்தமான அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார். இந்த படத்தில் காதலுக்காக அரசியலில் ஜெயிக்க போராடும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அரசியலில் அவர் அழகாக காய் நகர்த்தும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு இந்த படம் இன்னொரு மாநாடு போல வெற்றிப்படமாக அமையும்” என்று கூறினார்.
நடிகர் ஆனந்தராஜ் பேசும்போது, “அமீர் எனது மிக நெருங்கிய நண்பர்.. அவருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம்.. அவருக்கென என ஒரு தனி இடம் இருக்கிறது.. எனக்கு இன்னும் நடிப்பு பசி இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரசியல் நையாண்டி மட்டுமே இல்லாமால் ஒரு நல்ல கதையும் இருக்கிறது” என்று கூறினார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்தின் டைட்டில் எனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும் கூட. என் படங்களை கூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால் இந்த படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான் அரசியலையும் அமீரையும் தவிர்க்கவே முடியாது.. சத்யராஜ், கவுண்டமணி போல இந்த படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கூறினார்.
நடிகர் ராஜசிம்மன் பேசும்போது, “இந்த படம் நிறைய நாட்கள் தயாரிப்பில் இருந்தது. வேறு யாரவது என்றால் இதை கிடப்பில் போட்டுவிட்டு சென்று இருப்பார்கள். ஆனால் இயக்குநர் ஆதம்பாவாவும் அமீரும் விடாமல் நின்று ரிலீஸ் வரை கொண்டு வந்து உள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக திடீரென ஒரு நாள் படப்பிடிப்பிற்கு கிளம்பு வேண்டியிருந்ததால், கோவையிலிருந்து இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அந்த அளவுக்கு இந்த படம் எனக்கு நெருக்கமான ஒன்று” என்று கூறினார்.
இயக்குநரும் நடிகருமான அமீர் பேசும்போது, “தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் எனிடம் பேசாமல் இருந்தார்.
நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை வெளியிடுகிறார் என்றதும் எனது படத்திற்காக வைத்திருந்த உயிர் தமிழுக்கு என்கிற டைட்டில் இதற்கு பொருத்தமாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டேன். இந்த சமயத்தில் இது சரியான ஒரு டைட்டில்.
ஆனந்த்ராஜ வில்லனாக நடித்து பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தில் அவருக்கு அப்படி சில காட்சிகள் இருக்கின்றன. சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி போல எனக்கும் இமான் அண்ணாச்சிக்குமான கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இது வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் இருந்து இந்த கூட்டணி தொடரும். இளையராஜாவுக்கு பிறகு, நான் வியந்து பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்திற்காக மெனக்கெட்டதை மறக்க முடியாது. படத்தில் எம்ஜிஆர் பாடல் உள்ளிட்ட நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன..
இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள்.. இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டே இருக்கணும்.
நான் எப்போதும் கதையின் நாயகனாக தான் இருப்பேன்.. சினிமா என்பது இயக்குனரின் மீடியம்.. நாயகர்களால் தான் சினிமா என்கிற பிம்பத்தை தான் உடைக்க விரும்புகிறேன் அதேசமயம் ஒரு ரசிகனாக நடிகர்களை கொண்டாடுவோம்.. உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை..
பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம்.. அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்..
விரைவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நான் ஒரு படம் இயக்க உள்ளேன்.. ஏற்கனவே இறைவன் மிகப் பெரியவன் மற்றும் இன்னொரு படம் கைவசம் இருக்கிறது.. அதை முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குவேன்” என்று கூறினார்