People Media Factory, one of the reputed production houses of the Telugu film industry that has churned out commercially successful hits started with the blockbuster flick ‘Goodachaari’, stepped into the Tamil film industry by producing like Witness and Saala. Its Production No 3 titled ‘Vadakupatti Ramasamy’ brings the Blockbuster Combo of ‘Dikkiloona’ – Actor Santhanam & Director Karthik Yogi together again.

Mr. V Shree Natraj , Creative Producer, of People Media Factory, says, “People Media Factory has visionary producers like T.G Vishwaprasad and Co-Producer Vivek Kuchibhotla who have proven and entertained audiences from all walks of life with the best entertainers in the Telugu film industry. When we decided to produce Tamil movies, we wanted to deliver commendable commercial entertainers. Precisely, we were keen on working with actor Santhanam for his adroitness of looking perfect in movies based on any genre. Coincidentally, we watched his movie Dikkiloona and met director Karthik Yogi, who narrated to us an engrossing story. Vadakupatti Ramasamy is based on one of the popular characterizations of versatile actor Goundamani sir. It has become a famous meme material of the current generation across all social media platforms as well. When Karthik completed the script narration, we felt it synched well with the movie gist and the protagonist’s characterization. Tamil Nadu has been the domain of ‘Belief Vs Non-Belief’. There are many hidden layers in it because the name Ramasamy, itself, is an iconic one that speaks against superstitions. More than all, the director is a huge fan of Goundamani sir, and his previous movie ‘Dikkiloona’ too, was inspired by the ace actor’s comedy lines. We strongly believe Vadakupatti Ramasamy, a period comedy-drama by its genre, will amuse the universal crowds.”

While Santhanam is playing the lead role, the makers are in pursuit of finalizing the actress for the female lead character. Actor Tamizh plays the antagonist. The others in the star cast include John Vijay, MS Bhaskar, Ravi Mariya, Maaran, Motta Rajendran, Nizhalgal Ravi, Seshu, It is Prashanth, Jacqueline, and many others.

Sean Roldan is composing the music, and Deepak (Director and DOP of the critically acclaimed ‘Witness’ movie), is handling cinematography for this film. Shiva Nandeeswaran (Dheeran: Adhigaaram Ondru, Teddy fame) is the editor, Rajesh (Comali fame) is the art director, and Sheriff is the choreographer.

The film’s shoot commences tomorrow (January 24, 2023) with a simple ritual Pooja ceremony, and the makers are planning the worldwide theatrical release in Mid-Summer 2023.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக்பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக வெற்றிகரமான பல படங்களைக் கொடுத்துள்ளது. ‘விட்னெஸ்’ மற்றும் ‘சாலா’ போன்ற படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தது. இப்போது அதன் மூன்றாவது தயாரிப்பில் (புரொடக்சன் நம்பர் 3) உருவாகும் படத்தில் ‘டிக்கிலோனா’ பட ப்ளாக்பஸ்டர் வெற்றி கூட்டணியான நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் கார்த்திக் யோகி இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ் கூறும்போது, ​​“பீப்பிள் மீடியா ஃபேக்டரியில் தொலைநோக்குப் பார்வையுள்ள தயாரிப்பாளர்களான டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் இணைத் தயாரிப்பாளர் விவேக் குச்சிபோட்லா ஆகியோர் தெலுங்கில் சிறந்த பொழுதுபோக்கு படங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளனர். நாங்கள் தமிழில் படங்கள் தயாரிக்க முடிவு செய்த போதும், இதே போன்று நல்ல கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களைக் கொடுக்க நினைத்தோம். உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சந்தானம் எந்தவொரு ஜானர் கதைக்கும் பொருந்திப் போகக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்தோம். அப்போது தற்செயலாக நாங்கள் ‘டிக்கிலோனா’ படம் பார்த்துவிட்டு இயக்குநர் கார்த்திக் யோகியை சந்தித்தபோது அவர் ஒரு அற்புதமான கதையை எங்களுக்கு சொன்னார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பன்முக நடிகர் கவுண்டமணி சாரின் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று. இப்போதுள்ள தலைமுறை இளைஞர்களிடம் அனைத்து சமூகவலைதளங்களிலும் இந்த கதாபாத்திரம் மீம் மெட்டிரியலாக உள்ளது.

கார்த்திக் கதையை சொல்லி முடித்தபோது, ​​அது படத்தின் சாராம்சம் மற்றும் கதாநாயகனின் குணாதிசயத்துடன் நன்றாக பொருந்திப் போயிருப்பதை உணர்ந்தோம். பல விஷயங்களில் ‘நம்பிக்கை Vs நம்பிக்கையற்றது’ என்பதைக் கொண்டு தமிழ்நாடு இருந்து வருகிறது. ராமசாமி என்ற பெயரே மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசும் ஒரு சின்னமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குநர் கவுண்டமணி சாரின் மிகப்பெரிய ரசிகர். மேலும் அவரது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ கூட கவுண்டமணி சாரின் பல நகைச்சுவை வரிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக அமைந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

சந்தானம் படத்தின் கதாநாயகனாக நடிக்க கதாநாயகி யார் என்பதை இறுதி செய்யும் பணியில் படக்குழு இருக்கிறது. ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

இசை: சீன் ரோல்டன்,
ஒளிப்பதிவு: ‘விட்னெஸ்’ படப்புகழ் தீபக்,
படத்தொகுப்பு: ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘டெடி’ படப்புகழ் சிவ நந்தீஸ்வரன்,
கலை இயக்குநர்: ‘கோமாளி’ படப்புகழ் ராஜேஷ்,
நடன இயக்குநர்: ஷெரிஃப்

இன்று (ஜனவரி 24, 2023) படத்தின் பூஜை எளிமையாக நடந்துள்ளது. மேலும் 2023, கோடை மத்தியில் உலகம் முழுவதும் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here