The foundation, which has been developing and implementing various schemes for the farmers and farming, started its first mission by identifying and supporting farmers who had lost their livelihoods due to Cyclone Gaja.

Uzhavan foundation has supported the restoration of many water sources and is also strategizing necessary projects to enhance the environment.

A lot of traditional seeds that were part of our life are becoming antiquated today. The foundation is also providing incentives to farmers across the country, who restore and dissipate such traditional seeds, so that their nobel work continues. Uzhavan is also conducting a state-level competition to design tools that helps small and mid scale farmers. In addition to this, every year, the distinguished Personalities from farmer community is honored with 'Uzhavan' awards. 

Uzhavan is constantly identifying and providing incentives to individuals who love agriculture. Like Farmers who use modern technology to come up with best sales strategies, successful women farmers, differently abled people who excel in farming, schools for differently abled that enlightens school children about agriculture and school students who also take keen interest in agriculture whilst studying

In this regard, Uzhavan Foundation's Uzhavar Awards - 2023, the event which honors and recognizes the patrons of agriculture, will be held on 25th January 2023 at 4.30 pm at Sir PT Thyagaraya Hall, T.Nagar, Chennai.

The selected achievers will be presented with a Uzhavar award Memento and a cheque of Rs 1 lakh. Outstanding Achievement in Preserving and Disseminating Traditional Seeds will be awarded to Mr. Shanmuga Sundaram, Outstanding achievement in the field of Animal Husbandry will be awarded to Mr. Vetrivel of ‘Uzhavar Boomi’,

Best Agricultural Co-Operative Organization award goes to 'Keezh Atthivaakkam Pengal Iyarkai Vivasaaya Kootturavu Kuzhu',  Mr. Ramesh will be awarded with Outstanding Contribution to the field of Agriculture and Mr. Dinesh Kumar will be Honored as Best Agricultural Enthusiast. 

Actor Karthi, founder of Uzhavan Foundation, Artist and Actor Sivakumar, Actor Rajkiran, Actor Ponvannan, Director Pandiraj, Professor Sultan Ahmed Ismail, Doctor K. Sivaraman, and Ecologist Ananthu will be presiding and present the awards. This open event will be attended by farmers and public alike. 

We request that your good self to send a reporter and a camera team on behalf of your media house to cover this event.
உழவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை  உருவாக்கவும், நடிகர் கார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே  உழவன் ஃபவுண்டேஷன்.

	உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை கண்டறிந்து ஆதரவுக்கரம் நீட்டியது.  பல நீர் ஆதாரங்களை சீரமைக்க துணை நின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி   வருகிறது.
நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்கள் பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத்தொகை அளித்து வருகிறது. மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் போட்டியையும் மாநில அளவில் நடத்தி வருகிறது. அதோடு ஆண்டுதோறும் உழவர் பெருமக்களுக்கு விருதுகள்  வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது.

	நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த விற்பனை  உத்திகளைக் கையாளும் விவசாயிகள்,  வெற்றிகரமாக இயங்கும் பெண் விவசாயிகள்,  பார்வை சவால் உள்ள மாற்றுத் திறனாளி, விவசாயத்தை பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் மாற்றுப்பள்ளி, படித்துக்ககொண்டே விவசாயத்திலும் தீவிரம் காட்டும்  மாணவர் என வேளாண்மையை நேசிக்கும் மக்களை கண்டறிந்து  ஊக்கத்தொகை அளித்து வருகிறது உழவர் பவுண்டேசன்.
	
அந்த வகையில் விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி  அங்கிகரீக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் - 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மதியம் 4.30 மணியளவில் தியாகராயர் நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நிகழ்ச்சி துவங்குகிறது.  
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு உழவர் விருது மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படவிருக்கிறது.   

	இதில் கால்நடை துறையில் சிறந்த பங்களிப்புக்கான விருது திரு. வெற்றிவேல் அவர்களுக்கும், சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான விருது கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவு குழு விற்கும், மரபு விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கத்திற்கான விருது திரு. சண்முகசுந்தரம் அவர்களுக்கும், சிறந்த வேளாண் பங்களிப்புக்கான விருது வானகம் ரமேஷ் அவர்களுக்கும், சிறந்த வேளாண் ஆர்வலர்க்கான விருது திரு. தினேஷ்குமாருக்கு அவர்களுக்கும்,  வழங்கப்படவுள்ளது
	இந்த விழாவில் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனர் நடிகர் கார்த்தி, ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார், நடிகர் ராஜ்கிரண், நடிகர் பொன்வண்ணன் இயக்குனர் பாண்டிராஜ், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் கு. சிவராமன், மற்றும் சூழலியலாளர் அனந்து ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்நிகழ்வுக்கு தங்களின் ஊடகத்தின் சார்பாக செய்தியாளர் மற்றும் ஒளிப்படக்கலைஞரை அனுப்பி வைக்கும்படி கோருகிறோம்.
நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here