இசைத் துறையில் முத்திரை பதிக்கும் சாம் சி.எஸ்.

பத்து ஆண்டுகளுக்குள் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பல பாராட்டுக்குரிய படங்களைத் தந்து, இசையுலகில் தன் அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார். சிறந்த இசைப் பாடல்களை தந்ததோடல்லாமல், மிகச் சிறந்த பின்னணி இசையையும் வழங்கி, யூ ட்யுபின் ஓ.எஸ்.டி. ஜூக் பாக்ஸில் அதிக வரவேற்பு பெறும் இசைக் கலைஞராகவும் திகழ்கிறார். வெகுவாக பாராட்டப்பட்ட ‘விக்ரம் வேதா’ படத்தின் தனித்துவமான இசை, அவரது அழுத்தமான முத்திரைக்கு ஒரு பிராண்ட் நேம் கொடுத்திருப்பதுடன் மேலும் பல நல்ல படவாய்ப்புகளையும் தேடித் தந்திருக்கிறது.

இது குறித்து விவரித்த இசையமைப்பாளர் சாமி சி.எஸ். “திரைத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாகத்தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர்கள்தான் எனது பணியை அங்கீகரித்து எண்ணற்ற ரசிகர்களிடம் நான் சென்றடைய உதவியவர்கள். தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எனது இசைப் பணியைப் பாராட்டி ஊக்குவித்ததை எனக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களோ தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே என்னைக் கருதுகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர்கள் போடும் பதிவுகள், ட்வீட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, சந்தோஷமாக இரு்க்கிறது என்று சொல்லி ஒரு புன்னகையுடன் சாதாரணமாக அதைக் கடந்து போய்விட முடியாதபடி என் கண்களை அவை ஈரமாக்குகின்றன. ரசிகர்களின் இந்த அன்பு மழை என்னை தெய்வீகத் தன்மையாக உணர வைக்கிறது. நேர்மறையான இந்த அதிர்வலைகள் மேலும் எனக்கு சக்தியையும் நம்பிக்கையையும் தருவதுடன், இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்பையும் அதிகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது” என்றார்.

பெரும் பொருட் செலவில், தயாரிப்பின் பல்வேறு படி நிலைகளில் இருக்கும் சுமார் ஒரு டஜன் படங்கள் தற்போது சாம் சி.எஸ். கைவசம் இருக்கின்றன. மாதவனின் ‘ராக்கெட்ரி’, அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ரெஜினா கேஸண்ட்ராவின் ‘சூர்ப்பனகை’, விஜய் சேதுபதியின் ‘800’, சசி குமாரின் ‘ராஜவம்சம்’, ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’, உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’, ‘மோச கல்லு’ தெலுங்குப் படம், ரவி தேஜாவின் பெயரிடப்படாத படம், ஹரீஷ் கல்யாண் நடிக்கும் நேரடித் தெலுங்குப் படம், புஷ்கர் காயத்ரியின் வெப் சீரிஸ் ஆகியவற்றுடன் வேறு சில படங்களும் சாம் சி.எஸ்.கைவசம் இருக்கின்றன.


In less than a decade, Sam CS has stamped his musical journey with heaps of remarkable works. With an impressive spell of delivering the best music, he furthermore elevated his stature by capturing the crowds with ‘Background Score’, where the demand for OST Jukeboxes on YouTube became viral hits. Winning laurels and accolades for his colossal musical work in ‘Vikram Vedha’, his brand name got tagged to many sensational movies and his discography is loaded with more promising projects ahead.

Music director Sam CS says, “I thank everyone from the film fraternity, who laid their trust on me. If not for their support, this success would have not been possible. My heartiest thanks to the press and media friends! They recognized my works and took it towards zillions. The way they appreciated and promoted my works with personal interest is a priceless gift. My fans, who made me a part of their family. Every time, I go through their tweets, posts, and personal messages, they just don’t make me smile but moisten my eyes and such moments of emotional bliss are the way through which an artist can experience Godliness. Such positive vibrations instill more energy, confidence, and responsibilities to proceed ahead and deliver commendable works.”

Currently, Sam CS has lined up with a dozen of projects with high production values scheduled at different stages of production. This includes Madhavan’s Rocketry, Arun Vijay-Arivazhagan film, Regina Cassandra’s Soorpanagai, Vijay Sethupathi’s 800, Sasikumar’s Rajavamsam, Jai’s Yenni Thunika, Udhayanidhi Stalin’s Kannai Nambathey, Telugu film Mosagallu, Ravi Teja’s untitled next, and Harish Kalyan’s direct Telugu flick, Pushkar-Gayathri’s web series, and few more projects.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here