இதயத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிற காதுக்குள் சரவெடி சத்தத்தை ஏற்படுத்துகிற திரைப்படங்களின் மத்தியில் உணர்வுபூர்வமான இதயத்தில் பூவை வைக்கிற மாதிரி ஒரு படமாக ‘டாடா’ திரைப்படம் அமைந்திருக்கிறது. தற்பொழுது தரமான படங்கள், முக்கியமாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்கள் வருவது மிக மிக அபூர்வமாக இருக்கிறது. அப்படி ஒரு அபூர்வமாக வந்த படங்களில் இந்த டாடா பாடமும் ஒன்று.திரையில் பதிக்கிற உணர்வை அப்படியே நம் மனதில் பதிப்பவன்தான் திறமையான இயக்குனர். இப்படி ஒரு இயக்குனர் தான் திரு. கணேஷ்.கே.பாபு.இப்படத்தில் சில குறைகள் இருக்கலாம்,விமர்சனத்திற்கு உள்ளான காட்சிகள் இருக்கலாம் அதை பெரிதுபடுத்தி இந்த படத்தை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டாம். ஏனென்றால் இந்த மாதிரி சிறு பட்ஜெட் படங்கள் வெற்றியடையும் பொழுது தான் திரை உலகம் ஆரோக்கியமான பாதைக்கு செல்லும். இப்படி எப்பொழுதோ வரும் படத்திற்கு நாம் விமர்சனங்கள் என்ற பெயரால் எதிர்ப்புகளை வலுக்கச் செய்தால் மீண்டும் வெறும் வியாபார படங்களுக்குள் திரையுலகம் முடங்கிவிடும். இந்த டாடா படத்தை திரையுலகின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் வரவேற்போம் வாழ்த்துவோம் நன்றி!
பேரன்புடன்
பேரரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here