புதுமுக இயகுனர் கணேஷ் கே பாபு இயகத்தில், கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில், ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் டாடா. இப்படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான கதைகளை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம். சொல்லப்படும் விதம் சற்றே மாறி இருந்தாலும், கண்களை கசக்கும் அளவுக்கு சோகப்படமாக மாறி இருக்கும் கதையை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும்படியான படமாக கொடுத்திருகிறார் இயக்குனர் கணேஷ் கே பாபு.
படிக்கும் காலத்தில் காதலிக்கும் கவின், அபர்ணாதாஸ் ஜோடி சற்றே எல்லை மீறியதால் அபர்ணா தாஸ் கர்ப்பமாகிறார். இருவரின் பெற்றோர்களும் வீட்டை விட்டு விரட்டிவிட்ட நிலையில், காதலர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். அபர்ணாவுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஏற்படும் தவறான புரிதல் காரணமாக இருவரும் பிரிகின்றனர். குழந்தை கவின் கைவசம் வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தரமான சம்ப்வம்.
படம் முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சியும் அப்ளாஸ் அள்ளும் வகையில் இருப்பது மிகச்சிறப்பு. கவின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல். கல்லூரி படிக்கும் இளைஞன், காதலன், குழந்தையின் அப்பா என பல்வேறு காலகட்டங்ளிலும் மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் பின்னி இருக்கிறார் அபர்ணா தாஸ். விடிவி கணேஷ், பாக்யராஜ் என தேர்ந்த நடிகர்கள் கதா பாத்திரங்களுக்கு வலுவூட்டுகின்றனர்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஜென் மார்டினின் இசை. நுணுக்கமான மென் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய இடங்களை தன் இசையால் நிரப்பி இருக்கிறார். எழிலரசனின் இளமை பொங்கும் ஒளிப்பதிவு மிக அருமை, கதிரேஷ் அழகேசனின் கச்சிதமான படத்தொகுப்புக்கு பாராட்டுக்கள். மொத்தத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக வெளியாகி இருக்கிறது டாடா.
டாடா : தாயுமானவன்