• Celebrates the strength and talent of extraordinary child prodigies from Tamil Nadu
• SUPERKIDS 2023 awarded to – Gukesh D representing Chess, Lydian Nadhaswaram representing music, Vinisha Umashankar representing science & innovation, Prasiddhi Singh representing environment and K Prisha representing Yoga

Chennai, March 9, 2023: Tamil Nadu has always been a melting pot of diverse talent. Several eminent personalities from the state gained global recognition with their extraordinary talent and willpower. Celebrating this strength in talent, ITC Sunfeast Supermilk ‘SUPERKIDS Award 2023’, is an endeavor to celebrate, encourage and support exceptional young achievers from across the state.

The first edition of ITC Sunfeast Supermilk ‘SUPERKIDS Award 2023’ was held at a glittering event at ITC Grand Chola. Mrs. Sneha Prasanna, the Brand Endorser, and Mr. Ali Harris Shere, Chief Operating Officer, Biscuits & Cakes Cluster, Foods Division, ITC Ltd., presented the trophies to the prodigies for their exceptional achievements in the respective fields.

The ‘SUPERKIDS 2023’ recognized prodigies from various fields who have made both the state & the country proud with their accomplishments. Gukesh D, best known as one of the youngest grandmasters in history, earned the Grand master title at the age of 12. In March last year, Gukesh became only the sixth Indian to break the 2700 Elo-rating mark, and the youngest Grandmaster from the country to do so. He recently defeated World Champion Magnus Carlsen. Lydian Nadhaswaram, a stellar musician who can play more than 20 instruments, represented India amongst 185 countries around the globe & won the CBS’ The World’s Best talent competition.

Vinisha Umashankar, an artist, a TEDx speaker, an innovator, and an environmentalist, is well-known for her innovation, the Solar Ironing Cart. She spoke at the UN Climate Change Conference COP26 in Glasgow. Prasiddhi Singh, a social entrepreneur and environmental activist, is the founder of the Prasiddhi Forest Foundation. At a tender age of 10, she is a Prime Minister National Child Awardee. Dr. Prisha K, youngest yoga teacher known for her inspirational work in teaching yoga to visually impaired individuals, holds many ‘world’s first’ titles including youngest yoga teacher for blind certified by NCPCR central government, youngest most world record holder with 70 world records, youngest most honorary doctorate holder from USA and India, youngest author on yoga therapy, etc.

Speaking on the occasion, Mr. Ali Harris Shere, Chief Operating Officer, Biscuits & Cakes Cluster, Foods Division, ITC Ltd. said, “It is important for children to be exposed to various fields while growing up and then basis their affinity, be encouraged to follow their pursuits. We believe that a strong foundation helps children learn, grow and excel. With this first edition of ITC Sunfeast Supermilk ‘SUPERKIDS Award’, we embark on a journey to partner with children in their pursuit of excellence. The endeavor is to encourage children to dream big and pursue it with passion. Sunfeast Supermilk firmly believes in nurturing their potential. We hope our initiative also inspires other children to hone their skills and pursue their dreams.”

Speaking on the occasion, versatile actor and Brand Endorser, Sneha said, “It gives me immense pleasure to be associated with ITC and Sunfeast. I strongly believe that it is very important to nurture and believe in one’s strengths. Accomplishments big or small need to be recognised and celebrated. ITC Sunfeast Supermilk’s ‘SUPERKIDS Award’ is a brilliant platform to recognise achievers for their talent and effort. It also serves as a platform to inspire and encourage many young talents to explore and hone their skills.”

During the event, the prodigies were given a platform to share their journey of achievement. They spoke about the challenges they faced and what it took to pursue their dreams with dedication and passion. The awardees highlighted the importance of hard work, perseverance and a growth mindset in achieving success. The Superkids also emphasized on the constant support they received from their parents, highlighting the strength of upbringing that built their confidence and gave them a strong foundation.

The SUPERKIDS trophy awarded to the child prodigies is a symbol of recognition of their exceptional talent and dedication. Sunfeast Supermilk hopes to inspire more young achievers to pursue their dreams and achieve greatness.

XXX

For further queries, please reach out to
Debolina Palit | [email protected]
Nilanjan Mandal | [email protected]

Detailed profile of the child prodigies who were felicitated during the event are:

Indian GM Dommaraju Gukesh is a young chess prodigy. He is best known as one of the youngest grandmasters in history. In January 2019, Gukesh earned the Grand Master title at 12 years, 7 months and 17 days of age—narrowly missing GM Sergey Karjakin’s record by 17 days. In March last year, Gukesh became only the sixth Indian to break the 2700 Elo-rating mark, and the youngest Grandmaster from the country to be rated above 2700. He was recently honoured with Player-of-the-Year award by the Asian Chess Federation (ACF) for clinching the gold medal with a record-breaking score of 9/11 in the 44th Chess Olympiad at Mahabalipuram last year.

Lydian Nadhaswaram is a young Indian musician who is from Chennai. He plays more than 20 musical instruments. Lydian is the title winner of The CBS World’s Best Competition Season 1 in 2019. He represented India amongst 185 Countries around the globe and is also the first Indian musician to appear on the Ellen DeGeneres show & The Siempre Ninos Spanish tv show in Telemundo networks. Lydian has been a TED speaker & Performer for the past 5 years. The youngest solo pianist to play along with The Symphony Orchestra of India in 2019. Now he is a one and only student to Maestro Isaignani Ilaiyaraaja. He has won many accolades including, Saadhanai Thamizhan Award 2019, Vikatan Award, , Indian Book of Records for the youngest and fastest pianist and many more.

Prasiddhi Singh, is an entrepreneur and social activist. At the age of 10, she is a Prime Minister National Child Awardee (Highest Civilian Honor Under 18 years). She is the founder of the Prasiddhi Forest Foundation. The youngest Fruit Forest Creator of India-by-India book of Records. She is also the Brand Ambassador for the Nationwide Girl literacy campaign – “Beti Bachao Beti Padhao” by Tamil Nadu Government and a Child Ambassador of Green Tamil Nadu Mission. Prasiddhi is an advocate of biodiversity, she has created her own eco army of 36,000+ eco-warriors spread across the globe. Two times TEDx speaker, Prasiddhi is also the youngest keynote speaker of Harvard Model United Nations, India. Now she is working on Web3 Climate technology & Nature Based Solutions. She has won many awards and recognition including – The Diana Award – U.K (Highest & Prestigious global accolade for social Action & Humanitarian efforts), among others.

Vinisha Umashankar, is a Grade 11 student, an artist, a TEDx speaker, an innovator, and an environmentalist. She is well-known for her innovation, the Solar Ironing Cart. She was the only school student and the youngest Earthshot Prize 2021 finalist. She spoke at the UN Climate Change Conference COP26 in Glasgow. At the World Leaders’ Summit, her five-minute speech went viral on social media and 30 million views. Vinisha advocates change through innovation.

DR. K. Prisha is the world’s first youngest yoga teacher for blind certified by NCPCR central government, holder of 70 world records, honorary doctorate holder from USA and India, world’s first youngest author on yoga therapy. Prisha has represented India in International yoga competitions held at Malaysia and Thailand and won Gold medal and world championship. Prisha has participated in district, state, national, international yoga competitions and won more than 200 gold medals. She has received numerous awards such as Global child prodigy award, Abdul Kalam Award, Annai Teresa award to name a few.

ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், இளம் சாதனையாளர்களுக்கு சூப்பர் கிட்ஸ் 2023 விருது வழங்கி கெளரவித்தது

• தமிழ்நாட்டின் தனிச்சிறப்புடைய குழந்தைகளின் திறமை மற்றும் சாதனைகளை கொண்டாடுகிறது.

• சூப்பர்கிட்ஸ் 2023 விருதினை, குகேஷ் டி – செஸ், லிடியன் நாதஸ்வரம் – இசை, வினிஷா உமாசங்கர் – அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, பிரசித்தி சிங் – சுற்றுச்சூழல் மற்றும் கே ப்ரிஷா – யோகாவிற்காக பெற்றுக்கொண்டார்கள்.

சென்னை, மார்ச் 9, 2023: தமிழ்நாடு என்றுமே தலைசிறந்த திறமைசாலிகளை உருவாக்குவதில் பெயர்போனது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தங்கள் அசாதாரண திறமை மற்றும் மன உறுதியால் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். இத்தகைய திறமையைக் கொண்டாடும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள தனிச்சிறப்புடைய இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சியே, ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் ‘சூப்பர்கிட்ஸ் விருது 2023’.

ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் ‘சூப்பர்கிட்ஸ் விருது 2023’ விழா, ITC கிராண்ட் சோழாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிராண்ட் எண்டோர்சர் திருமதி. சினேகா பிரசன்னா மற்றும் ITC லிமிடெட் உணவுப் பிரிவின் பிஸ்கட் & கேக்ஸ் க்ளஸ்டருடைய தலைமை இயக்கு அதிகாரி திரு. அலி ஹாரிஸ் ஷேர் ஆகியோர் அந்தந்த துறைகளின் சாதனையாளர்களுக்கு கோப்பைகளை வழங்கினர்.

‘சூப்பர்கிட்ஸ் 2023’ பல்வேறு துறைகளில் தங்கள் சாதனைகளால் மாநிலம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்த இளம் சாதனையாளர்களை கெளரவித்தது. வரலாற்றிலே மிகவும் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவராக அறியப்படும் குகேஷ் டி அங்கீகரிக்கப்பட்டார். அவர் தனது 12-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். கடந்த ஆண்டில் குகேஷ் 2700 ELO-ரேட்டிங் மார்க்கை முறியடித்த ஆறாவது இந்தியர் ஆனார். இவர் சமீபத்தில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. லிடியன் நாதஸ்வரம், 20-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரு நட்சத்திர இசைக்கலைஞர். அவர் CBS- இன் The World’s Best போட்டி சீசன் 1-இல் உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

வினிஷா உமாசங்கர், ஒரு கலைஞர், TEDx பேச்சாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். அவர் தனது கண்டுபிடிப்பான, சோலார் அயர்னிங் கார்ட் மூலம் நன்கு அறியப்பட்டவர். கிளாஸ்கோவில் நடந்த UN காலநிலை மாற்ற மாநாடு COP26-இல் பேசியுள்ளார். பிரசித்தி சிங், ஒரு சமூக தொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரசித்தி வன அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். இவர் 10 வயதிலேயே, பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற்றவர். டாக்டர் ப்ரிஷா கே, மத்திய அரசின் NCPCR சான்று பெற்ற, பார்வையற்றோருக்கான இளம் யோகா ஆசிரியர். 70 உலக சாதனைகளைப் படைத்தவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர் மற்றும் யோகா தெரபியின் இளவயது எழுத்தாளர் போன்ற பல பட்டங்களை வென்ற சிறப்பு இவரை சேரும்

விழாவில் பேசிய ITC லிமிடெட் உணவுப் பிரிவின் பிஸ்கட்ஸ் & கேக்ஸ் க்ளஸ்டருடைய தலைமை இயக்கு அதிகாரி திரு. அலி ஹாரிஸ் ஷேர், “குழந்தைகளுக்கு பலதரப்பட்ட துறைகளை வெளிப்படுத்துவது முக்கியம், பின்னர் அவர்களின் ஆர்வத்தை அடையாளம் கண்டு அவர்களின் வேட்கையை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் வளரவும் சிறந்து விளங்கவும் பலமான அடித்தளம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ‘ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் சூப்பர்கிட்ஸ் விருது’-இன் மூலம், குழந்தைகளின் சாதனை முயற்சியில் ஒரு பங்குதாரராக எங்கள் பயணத்தை தொடங்குகிறோம். பெரிய கனவுகளைக் காணவும், அவற்றை வேட்கையுடன் பின்தொடரவும் குழந்தைகளை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். எங்கள் முனைப்பு, குழந்தைகளை அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், கனவுகளை தொடரவும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரபல நடிகரும், பிராண்ட் எண்டோர்சருமான சினேகா, “ITC மற்றும் சன்ஃபீஸ்டுடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவரின் பலத்தை வளர்ப்பதும், அதில் நம்பிக்கை வைப்பதும் மிகவும் முக்கியம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பெரியதோ சிறியதோ, சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் ‘சூப்பர்கிட்ஸ் விருது’ என்பது சாதனையாளர்களை அவர்களின் திறமை மற்றும் முயற்சிக்காக அங்கீகரிக்கும் ஒரு சிறந்த தளமாகும். இது குழந்தைகளுக்கு அவர்களின் திறமைகளை மேம்படுத்த ஊக்கமளிக்கும் தளமாகவும் செயல்படுகிறது” என்றார்.

இந்த நிகழ்வின் போது, சாதனையாளர்கள் தங்கள் சாதனைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை வழங்கப்பட்டது. அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் கனவுகளைத் தொடர என்ன தேவைபட்டது என்பதைப் பற்றி ஆர்வத்துடன் பேசினர். வெற்றியை அடைவதில் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் வளர்ச்சி மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விருது பெற்றவர்கள் எடுத்துரைத்தனர். அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கிய பெற்றோர்களின் சிறந்த வளர்ப்பை சூப்பர்கிட்ஸ் சுட்டிக்காட்டினர்.

சிறந்த குழந்தைகளுக்கான சூப்பர்கிட்ஸ் கோப்பை, அவர்களின் சிறப்பான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கான அடையாளமாக வழங்கப்பட்டது. சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் மேலும் பல இளம் சாதனையாளர்களை அவர்களின் கனவுகளைத் தொடரவும் மகத்துவத்தை அடையவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறது.

*

மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும்
டெபோலினா பலித் | [email protected]
நிலஞ்சன் மண்டல் | [email protected]

விழாவில் சிறப்பிக்கப்பட்ட குழந்தை சாதனையாளர்களின் விரிவான விவரம்:

இந்திய GM டோம்மராஜு குகேஷ், ஒரு இளம் செஸ் வீரர். வரலாற்றில் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். ஜனவரி 2019-இல், குகேஷ் 12 வயது, 7 மாதங்கள் மற்றும் 17 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், குகேஷ் 2700 ELO-ரேட்டிங் மார்க்கை முறியடித்த ஆறாவது இந்தியர் ஆனார், மேலும் இவர் இந்தியாவின் 2700-க்கு மேல் மதிப்பிடப்பட்ட இளம் கிராண்ட்மாஸ்டர் ஆனார். கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9/11 என்ற சாதனைப் புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக, ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை ஆசிய செஸ் கூட்டமைப்பு (ACF) சமீபத்தில் அவருக்கு வழங்கியது.

லிடியன் நாதஸ்வரம், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் இந்திய இசைக்கலைஞர். இவர் 20-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசிக்கக்கூடியவர். 2019-ஆம் ஆண்டு CBS- இன் The World’s Best போட்டி சீசன் 1-இன் வெற்றியாளர் ஆவார். உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டவர். லிடியன் கடந்த 5 ஆண்டுகளாக TED ஸ்பீக்கராக இருந்து வருகிறார். 2019-இல் இந்தியாவின் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து வாசித்த இளம் சோலோ பியானோ கலைஞர். அவர் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் ஒரே ஒரு மாணவர். சாதனை தமிழன் விருது 2019, விகடன் விருது, இளம் மற்றும் வேகமான பியானோ கலைஞருக்கான இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.

பிரசித்தி சிங், ஒரு தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். தனது 10 வயதில், பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற்றவர் (18 வயதுக்குட்பட்ட மிக உயர்ந்த குடிமகன் விருது). இவர் பிரசித்தி வன அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். India-by-India புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் இளம் ஃப்ரூட் ஃபாரஸ்ட் கிரியேட்டர். தமிழ்நாடு அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” என்ற தேசிய அளவிலான பெண் கல்வியறிவு பிரச்சாரத்திற்கான பிராண்ட் தூதராகவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் குழந்தைத் தூதராகவும் உள்ளார். Biodiversity ஆதரவாளரான இவர், உலகம் முழுவதும் 36,000-க்கும் மேலான சுற்றுச்சூழல் போராளிகளைக் கொண்ட ஒரு Eco-army-ஐ உருவாக்கியுள்ளார். இரண்டு முறை TEDx பேச்சாளர், அதோடு ஹார்வர்ட் மாடல் ஐக்கிய நாடுகள் சபையின் இளம் முக்கிய பேச்சாளர் ஆவார். இப்போது அவர் Web3 காலநிலை தொழில்நுட்பம் மற்றும் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளில் பணிபுரிகிறார். அவர் பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் வென்றுள்ளார் – தி டயானா விருது, U.K (சமூக நடவடிக்கை மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கான மிக உயர்ந்த உலகளாவிய சிறப்புரிமை), குளோபல் சைல்ட் ப்ராடிஜி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கது.

வினிஷா உமாசங்கர், 11-ஆம் வகுப்பு மாணவி, கலைஞர், TEDx பேச்சாளர், இன்னோவேட்டர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். தனது கண்டுபிடிப்பு, சோலார் அயர்னிங் கார்ட் மூலம் நன்கு அறியப்பட்டவர். Earthshot பரிசு 2021 இறுதிப் போட்டியாளர் என்ற பெருமையை கொண்ட இளம் பள்ளி மாணவி ஆவார். கிளாஸ்கோவில் நடந்த UN காலநிலை மாற்ற மாநாட்டில் COP26-இல் பேசினார். உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில், அவரது ஐந்து நிமிட பேச்சு சமூக ஊடகங்களில் 30 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு வைரலாகியது. புதுமையின் மூலம் மாற்றத்தை வலியுறுத்துகிறவர் வினிஷா.

DR. K. ப்ரிஷா, மத்திய அரசாங்கத்தின் NCPCR சான்றளிக்கப்பட்ட உலகின் முதல் இளம் பார்வையற்ற யோகா ஆசிரியர் ஆவார். மேலும் 70 உலக சாதனைகள் புரிந்தவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர், யோகா சிகிச்சையில் உலகின் முதல் இளம் எழுத்தாளர் ஆகிய சிறப்புகள் இவரை சேரும். ப்ரிஷா மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச யோகா போட்டிகளில் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் ப்ரிஷா. குளோபல் சைல்டு ப்ராடிஜி விருது, அப்துல் கலாம் விருது, அன்னை தெரசா விருது, சிறந்த சாதனையாளர்கள் விருது போன்ற பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here