2018ம் ஆண்டு வெளியான திரில்லர் படமான இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கண்ணை நம்பாதே. இப்படமும் ஒரு க்ரைம் த்ரில்லர் என்பதால் சொந்த க்ரவுண்டில் சிஸ்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர்.
உதயநிதியும் அவரது நண்பர் சதீஷும் வீடு தேடியலைய, பிரசன்னாவுடன் சேந்து தங்க முடிவு செய்கின்றனர். புதிய நண்பரான பிரசன்ன உதயநிதியை மது அருந்த அழைக்க, மதுப்பழக்கம் இல்லாத உதயநிதி மறுக்கிறார். ஆனால் உதயநிதியின் நண்பர் சதீஸ் மது அருந்தச்செல்ல, உடன் செல்கிறார் உதயநிதி. பாரில், மது அருந்துவிட்டு தள்ளாடியபடி வரும் பூமிகாவுக்கு உதவிசெய்யப்போய் கொலைப்பழியின் மாட்டிக்கொள்ளும் உதயநிதி எப்படி அதில் இருந்து மீள்கிறார் என்பதே கண்ணை நம்பாதே படத்தின் கதை.
கொலைப்பழிக்கு அஞ்சும் மிக எளிய சராசரி மனிதனாக, மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் உதயநிதி. எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அசரடிக்கும் நடிப்பை வெளிப்படுத்தும் பிரசன்னா இக்கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். நகைச்சுவை நடிப்பில் தன் திறனை நிரூபித்திருக்கிறார் சதீஷ். நாயகி ஆத்மிகா, பூமிகா அனைவரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரங்களை குறைவில்லாமல் சிறப்பாக செய்திருக்கிறார்கள்
த்ரில்லர் படத்தின் தன்மையை உணர்ந்து இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சிந்துகுமார். சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்ற குறையை போக்கி இருக்கிறது கண்ணை நம்பாதே திரைப்ப்டம்
கண்ணை நம்பாதே: த்ரில்லர் பயணம்