ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.

பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிரமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஒரு அன்னையாக மிக முக்கிய வேடத்தில், நடிகை அபிராமி நடிக்கிறார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் மொத்த படக்குழுவும் அவரது நடிப்பை கண்டு கண்கலங்கியுள்ளது.

இது குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது…
“பாபா பிளாக்‌ ஷீப்” பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிரமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன் என்றார்.

நடிகர்கள்
அயாஸ் நரேந்திர பிரசாத் ,,
அம்மு அபிராமி ,
‘விருமாண்டி’ அபிராமி ,
RJ விக்னேஷ்காந்த்,
சுப்பு பஞ்சு ,
சுரேஷ் சக்ரவர்த்தி ,
போஸ் வெங்கட் ,
வினோதினி வைத்தியநாதன் ,
சேட்டை ஷெரீப் ,
மதுரை முத்து ,
கேபிஒய் பழனி ,
ஓஏகே சுந்தர் ,
நக்கலைட்ஸ் பிரசன்னா ,
நக்கலைட்ஸ் தனம்,

தொழில்நுட்ப வல்லுநர்கள்
ஒளிப்பதிவு – சுதர்சன் சீனிவாசன்
இசை சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – MSP. மாதவன்
ஸ்டண்ட் – ‘உறியடி’ விக்கி
நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார்.
விளம்பர வடிவமைப்புகள் – கோபி பிரசன்னா
பாடல் வரிகள் – யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த்.
ஸ்டில்ஸ் – வேலு
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

தயாரிப்பு நிறுவனம் – ரோமியோ பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – ராகுல்
இயக்கம் – ராஜ்மோகன் ஆறுமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here