வெள்ளி திரைக்கு முன் உங்கள் இல்லத்திரையில் நடிகர் ஆரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் கலந்த நகைச்சுவையான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம் உங்கள் கலர்ஸ் தமிழில் நேரடி தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகிறது

~ மிகவும் சுவாரஸ்யமான இந்த அறிவியல் திரைக்கதையை வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள் ~

*சென்னை 21 மார்ச் 2023: *வயகாம் 18இன் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு ஒரு தனித்துவமான அறிவியல் சார்ந்த நகைச்சுவை திரைப்படமான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ புத்தம் புதிய விறுவிறுப்பான கதைகளத்தை ஒளிபரப்ப தயாராக உள்ளது.

மனித குலத்தின் விதியை மாற்றக்கூடிய அண்டைவெளியில் ((Space) இருந்து கிடைக்கும் ஒரு மதிப்புமிக்க கியூப்-க்காக (Cube) வேற்றுகிரகவாசியும் மனிதனும் சண்டையிடும் உண்மையான அறிவியல் கதைகளத்தை தத்ரூபமாக தன் முதல் படத்திலேயே இயக்குனர் யு.கவிராஜ் வெளிக்காட்டி உள்ளார்.

மிகவும் பிரபலமான ரௌதர் பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ஆரி மற்றும் நடிகை சுபஸ்ரீ ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் மொட்ட ராஜேந்திரன், தீனா, பகவதி பெருமாள், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோலிவுட் திரையுலகில் இதுவரை கண்டிராத காட்சிகளில் மனிதர்களும் வேற்றுகிரக வாசிகளும் மோதுவது தான் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் திரைப்படத்தின் கருத்தாகும்.

மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மண் வளத்தை காப்பாற்ற துடிக்க ஒரு புதிய விஞ்ஞானயத்தை கண்டு பிடிக்கும்இளைஞனின் கதைதான் இத்திரைப்படம். ஆனால் க்யூப்யை (Cube) அழிக்கும் நோக்குடன் வேற்றுகிரகவாசிகள் மற்றும் வில்லனால் சதி நடக்கிறது. ஆரி க்யூப்பின் (Cube) உதவியுடன் மனித குலத்தைக் காப்பாற்றுவாரா? அல்லது வில்லன்களும் வேற்றுகிரகவாசிகளும் அவரை கொன்று விடுவார்களா? மற்றும் இறுதியில் யார் கைக்கு அந்த க்யூப் (Cube) கிடைத்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை அறிய, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

நேரடி தொலைக்காட்சி பிரீமியர் குறித்து இயக்குனர் யு.கவிராஜ் கூறுகையில், “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துபான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், மக்கள் அனைவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வார இறுதியை பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை உண்டாக்கும் என நம்புகிறேன்.

இத்திரைப்படம் குறித்து முன்னணி நடிகர் ஆரி கூறுகையில், முதலில் இப்படி ஒரு வித்தியாசமான கதைகளத்திற்கு நடிக்க என்னை தேர்வு செய்த இயக்குனர் யு.கவிராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் இதுவரை நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இப்படத்தில் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வேற்றுகிரகவாசிகள் மற்றும் பிற அற்புதமான புதுமைகளைக் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த சுவாரஸ்யமான அறிவியல் திரைக்கதையை வரும் ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பல அறிவியல் சார்ந்த விஷயங்களை தங்கள் கண் முன்னே நிஜ உலகில் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here