Producer Durai Veera Sakthi of VAU Media Entertainment’s upcoming production ‘Peranbum Perungobamum’ marks the directorial debut of Veteran filmmaker Balu Mahendra’s student – Filmmaker Siva Prakash.

The film owns an unparalleled concept that emphasizes social inequality in a new-dimensional perception, which so far, hasn’t been witnessed in Tamil cinema.

The film will be one among the league of promising Tamil films like ‘Pariyerum Perumal’, and ‘Asuran’, which strongly comments that a person becomes a true egalitarian not because of his acquisition of wealth and education, but with noble thoughts. A good human is someone, who embellishes his heart and soul with good thoughts rather than adorning his image with titles.

Peranbum Perungobamum is about one such common man.

What begins as an investigation of two missing babies takes us through a chain of events involving shocking twists and turns. The story is set against the backdrops of the years 1998, 2000, and 2022. Significantly, the entire crew with scrutinizing efforts carried out extensive research of collecting images and news articles of respective periods, thereby adding a realistic touch to the live locations in the movie.

Newcomer Vijith is playing the lead role in this movie and appears as 20 yr old, 23 yr old, and 46 yr old characters. Since the story is set in three periods, he went through intense training to gain and shed weight, thereby befittingly looking perfect in three different looks.

Usually, well-established actors commit themselves to reducing their weight after acting in many movies. However, Vijith as a newcomer has done this with complete enthusiasm by showcasing different looks and unique performances, thereby getting appreciated and applauded on the shooting spots.

It’s not just the hero; even the film’s heroine appears in three different looks for three different time periods in this movie.

Actress Shali Nivekas, who is winning appreciation for her spellbinding performance as ‘Nachiyar’ in the ‘Sengalam’ web series is playing the female lead role.

While Vijith and Shali Nivekas are playing the lead roles, the others in the star cast include Mime Gopi, Aruldoss, Subathra, Vijay TV fame Deepa, Sai Vinod, and actor Kathir’s father Logu, who appear in prominent characters.

Isaignani Ilaiyaraaja is composing music for this film, and has taken up this project after the grand success of his recent project ‘Viduthalai’. It is worth mentioning that Ilaiyaraaja is composing music for Vetrimaaran, a former assistant to Balu Mahendra, and now, Sivaprakash, a student at Balu Mahendra’s film workshop.

JB Dinesh Kumar of ‘Saththam Podathey’, ‘Moondru Per Moondru Kadhal’ fame is handling cinematography for this film. Ramar of ‘Asuran’ and ‘Viduthalai’ fame is taking care of editing, and Saravanan is the art director.

Durai Veera Sakthi of VAU Media Entertainment is producing this film.

சமூகத்தின் ஏற்ற தாழ்வு பார்வையை கிழித்தெறியும், “பேரன்பும் பெருங்கோபமும்” !!

VAU MEDIA ENTERTAINMENT-ன் தயாரிப்பாளர்
துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா மாணவர், அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் “பேரன்பும் பெருங்கோபமும்”.

இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக உருவாகி வருகிறது இப்படம்.

“பரியேறும் பெருமாள்”, “அசுரன்” என சமத்துவம் பேசும் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளின் வரிசையில், செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன். வெரும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன் .
இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த திரைப்படம்.

இரு குழந்தைகளை காணவில்லை என ஆரம்பிக்கும் விசாரணை, பல அதிர்ச்சியான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்து செல்கிறது. 1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடக்கிறது. இதற்காக படக்குழு அக்காலத்திய படங்கள் பத்திரிகை செய்திகளை ஆராய்ந்து, கடும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, நேரடி லொகேஷன்களில் தத்ரூபமாக அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வருகிறார்கள்.

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். 20, 23 மற்றும் 46 வயது உள்ளவராக தோன்றுகிறார். மூன்று காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கடும் பயிற்சி எடுத்து, உடல் எடையை கூட்டி, மீண்டும் குறைத்து இப்படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
பல படங்களில் நடித்த பிறகுதான் இந்த மாதிரி பெரிய ரிஸ்காக உடல் எடையை குறைப்பது.. கூட்டுவது என முன்னணி நடிகர்கள் செய்வது வழக்கம். அதை புது முகமாகவே உற்சாகத்தோடு.. தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும்.. படபிடிப்பில் கைதட்டல் பெறுகிறார்,நாயகன்.

நாயகன் மட்டுமல்லாது இப்படத்தின் நாயகி மற்றும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே மூன்று காலகட்டங்களில் மூன்று வித தோற்றங்களில் நடிக்கிறார்.
நாயகியாக, செங்கலம் வெப் சீரிஸ்’ல்
நாச்சியாராக நடித்து பலரது பாராட்டுகளை வாங்கிய ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார்.

விஜித், ஷாலி நிவேகாஸ் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, MIME கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இத் திரைபடத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். சூப்பர் கிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் #விடுதலை படத்திற்கு பிறகு இந்தத் திரைப்படத்தை ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் பாலுமகேந்திரா உதவியாளர். இப்படத்தை இயக்கிவரும் சிவபிரகாஷ், பாலு மகேந்திராவின் சினிமா பட்டறை மாணவர். பாலு மகேந்திராவின் இந்த இரு இயக்குனர்களுக்கு இளையராஜா இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.

‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த JB தினேஷ் குமார் ஒளிப்பதிவு  செய்துள்ளார்.
ராமர், படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் ‘அசுரன்’, ‘விடுதலை’ போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தரமான படைப்புகளை தந்து வரும், VAU MEDIA ENTERTAINMENT-சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்துவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here