‘Kulasami’, an action thriller, featuring Vimal and Tanya Hope in the lead roles, is produced by MIK Productions Private Limited, and is directed by Saravana Sakthi of ‘Billa Pandi’ and ‘Nayagan’ fame. The film ‘kulasami’ is all set for the worldwide theatrical release on April 21, and the entire crew along with few eminent personalities from the industry hosted the audio and trailer launch of this movie.

Director Saravana Sakthi said, “I thank Makkal Selvan Vijay Sethupathi for writing dialogues for this film, which became a major attraction. Thiru. Jankit, one of the most respected and reputed police officers of Tamil Nadu as acted in this movie. Despite his busy schedules, director Ameer has made his presence here to support this movie. Suresh Kamatchi and I have been buddies for years. He has now become a great producer. I thank him for coming here. Makkal Selvan Vijay Sethupathi has written wonderful dialogues for this movie. His involvement has added good value to this film. This film is now arriving amidst lots of challenges. I thank the entire team and everyone, who worked hard in shaping this movie. The film has a good message , and I request you all to support it. Thank You.”

Music Director Mahalingam said, “Both myself and producer belong to the same village. I started a YouTube channel out of passion, and producer after looking into it gave the opportunity to compose music for this film. I was initially reluctant to compose music as I felt this industry is huge, but the entire team gave me confidence. Director kept motivating me constantly. We are a new team, and I request everyone to support us. Thank You.”

Cinematographer Wide Angle Ravi said, “I started my career as a press photographer, and learned cinematography from P.C. Sriram sir. When Saravana Sakthi narrated the script, I could clearly visualize that it is going to be a fabulous film. Saravana Sakthi has directed this film in a perfect way. I wish the crew, a huge success.”

Producer Suresh Kamatchi said, “Both myself and director Saravana Sakthi are close friends. When I left abroad for job opportunities, he was giving his best to make a breakthrough in the directorial venture. I am so happy to see that he is still having the same vibes to achieve bigger in the industry. He is a great talent, and has lots of good stories, but still hasn’t found the right opportunity. I am confident that this movie will offer him a major breakthrough, and I wish the entire team, a huge success.”

Producer Aadam Bava said, “You all know Saravana Sakthi as an actor, but I have known him from the days of his directorial ventures as I had the opportunity to work with him. I would like to share some interesting facts about it. Both Suresh Kamatchi and the director are old friends. 20 years back, he was directed a movie titled ‘Dhandayuthapaani’, which marked his directorial debut and for me, his maiden project as assistant director. A day before the shoot, the film’s lead actor was changed due to his demand for high remuneration. When enquired, who is playing the lead role, we were informed that the producer’s nephew is going to be the replacement. I didn’t want that to happen, and I told Saravana Sakthi that let us wait patiently for even 10 years to make the film, but not with the wrong star cast. But Saravana Sakthi told that he got this opportunity to direct after 15 years of the long wait. Later, I spoke to the same actor, who reduced his remuneration from 3 ½ Lakhs to 1 ½ Lakhs. That hero is none other than actor Arya. We managed to complete the entire project. After the film’s release, there was a review stating that “Saravana Sakthi is one of the most unavoidable commercial filmmakers of Tamil cinema.” I would often keep commenting on him. Later, he made a movie featuring a political party leader in the lead role. The film had almost all the visitors to the political party office. He has encountered so many incidents like this in his life. As soon as I saw the first look of kulasami, I instantly called and wished him. I told him that he has finally got a script that is tailor-made for him, which will be a huge success. I wish the entire team great success. I wish that he continues to make more movies.”

Actress Deva Darshini said, “I am not a part of this film. I have acted in a movie titled ‘Badava’ that features Saravana Sakthi sir as my co-star. I acted as Vimal’s elder sister in that movie. I think I am not given an opportunity in this movie as there isn’t any sister role here. I wish the entire team great success. I am happy to see that the film’s trailer is engaging. I have never seen Vimal in this new avatar. Usually, he would be seen playing jovial roles, but this movie features him in a different character. I have known the film’s music director from the days of his small screen journey. He is a good singer, and all the songs have come out very well. I request you all to watch the movie in the theaters and support it.”

Producer Nama Sivayam said, “This is an important film to all of us on the team. We have tried narrating a good story. I am glad that the eminent personalities from the film industry are here to wish us. I request you all support this movie. Thank you.”

IPS Officer SR Jangid said, “My heartiest congratulations to my brother Saravanan Sakthi and the entire team. I am still unable to believe that I have acted in a Tamil movie. My driver has been my Tamil tutor. I don’t know Tamil and he don’t speak English. Both of us had communication problem, and that’s when I started attempting to learn Tamil. I thought acting in a movie is so easy, but later realized that it’s so difficult. Although my role has a little screen time, it has some good message to impart. Dubbing my portions were more complicated than acting, but somehow managed to do it. I request all the press and media to help this movie with a good message, find a great reach among the public. Thank You.”

Director Ameer said, “Director Saravana Sakthi is my close friend, and he is my co-star in a movie as well. Usually, when a director becomes an actor, there would be some hardships, and it was both Saravana Sakthi and Annachi, who sorted out of this issue. Both of them made sure that I am comfortable throughout the shooting. Saravana Sakthi is a talented person. Today, even the biggest stars and movies like Ponniyin Selvan are consistently promoting the films, but it’s a little disappointing to see that the film’s lead actors aren’t present here for the event. Jankit sir has managed to eclipse this issue here. I wish the entire team, great success.”

Vimal and Tanya Hope are playing the titular characters in this film that marks the debut of director Saravana Sakthi’s son Surya as the antagonist.

Wide Angle Ravi Shankar is handling cinematography and Gopi Krishna of Thani Oruvan fame is taking care of the editing for this film. Zee Tamizh Rockstar fame playback singer Mahalingam is debuting as music director with this film. Kanal Kannan is choreographing students. The film, which is an action thriller, is scheduled for worldwide theatrical release on April 21, 2023.

Kulasami Audio & Trailer Launch Photos Wetransfer Download Link

https://we.tl/t-tHqlZhkv0d

‘குலசாமி’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

விமல் நடிப்பில், இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில், “குலசாமி” ஏப்ரல் 21 முதல் திரையரங்குகளில்

3 லட்சம் கேட்ட ஆர்யா குலசாமி பட விழாவில் தயாரிப்பாளர் ஆதம் பாவா !!

பொன்னியின் செல்வன் படத்திற்கே இது தான் நிலைமை – குலசாமி பட விழாவில் இயக்குநர் அமீர்

MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது…

இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி. அமீர் அண்ணன் அவருடைய படங்களை தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர் அவர் எனக்காக வந்துள்ளார். சுரேஷ் காமாட்சியும் நானும் ஒன்றாக சுற்றியவர்கள் இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார் அவருக்கு நன்றி. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிகச்சிறப்பான வசனங்கள் தந்துள்ளார். அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது. இந்தப்படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் இந்நேரத்தில் நன்றிக் கூறிக்கொள்கிறேன். நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் மஹாலிங்கம் பேசியதாவது..

தயாரிப்பாளரும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் என் கிராமத்து இசையை ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் எனக்கு பிடித்ததை செய்து கொண்டிருந்தேன் அதைப்பார்த்து இந்தப்படத்திற்கு இசை அமையுங்கள் என்றார் தயாரிப்பாளர். இந்தக்களம் பெரிது புதிது என்பதால் தயங்கினேன் ஆனால் படக்குழு தைரியம் தந்தார்கள். இயக்குநர் எனக்கு ஊக்கம் தந்தார். நாங்கள் புது டீம் நீங்கள் தான் எங்களுக்கு ஆதரவு தந்து எங்கள் படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும். நன்றி.

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவி பேசியதாவது..

என்னுடைய கேரியரை பிரஸ் போட்டோகிராபராக தான் ஆரம்பித்தேன் பிசி சாரிடம் தான் கேமரா கற்றுக்கொண்டேன். சரவண சக்தி கதை சொன்னபோதே இந்தப்படம் பெரிய வகையில் வரும் என்று தெரிந்தது. சரவண சக்தி மிகச்சிறந்த வகையில் இயக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். நான் காசில்லாமல் வேலைக்காக வெளிநாடு சென்ற போதே அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் இங்கு வந்தபிறகும் அவர் அதே முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார். நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது..

இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன், சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள் , இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார், அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர், அதன் பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர், நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார் , அதன் பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன் அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார், அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான் , ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம், படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது, “சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார் ” என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன் , அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார், அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார், இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது, இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன் உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும் , நன்றி.

நடிகை தேவதர்ஷினி பேசியதாவது..

நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை , படவா படத்தில் நான் நடித்திருக்கிறேன் அதன் மூலம்தான் சரவணன் சாரை எனக்கு தெரியும் அந்த படத்தில் நான் விமலுக்கு அக்காவாக நடித்துள்ளேன் இந்தப் படத்தில் அக்கா கதாபாத்திரம் இல்லை அதனால் தான் என்னை அழைக்கவில்லை , மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் , படத்தின் டிரைலரை பார்க்கும்போது நன்றாக இருந்தது, விமலை நான் இப்படி பார்த்தது இல்லை எப்போதும் கலகலப்பான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார், ஆனால் இதில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார், இப்படத்தின் இசையமைப்பாளர் சின்னத் திரையில் இருந்தே எனக்கு அவரை தெரியும் ஒரு நல்ல பாடகர் , பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது, படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி,

காவல்துறை அதிகாரி ஜாங்கிட் பேசியதாவது..

தம்பி சரவணன் சக்தி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள், நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை, எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது என்னுடைய டிரைவர் தான், என் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கு தமிழ் தெரியாது, ஒரு நாள் அவரிடம் சீப்பு கேட்டேன் அதை நான் புரிய வைப்பதற்குள் ரொம்ப சிரமப்பட்டேன் , அன்றிலிருந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், படத்தில் நடிப்பது நான் சுலபமான விஷயம் என்று நினைத்தேன் ஆனால் அது மிகக் கடினம் என்பதை புரிந்து கொண்டேன், என்னுடைய கதாபாத்திரம் சிறியது தான் ஆனால் சமுகத்திற்கு தேவையான கருத்தை படத்தில் கூறியுள்ளேன். டப்பிங் அதற்கும் மேல் கஷ்டமாக இருந்தது ஆனாலும் கஷ்ட பட்டு பேசியுள்ளேன். இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ள கருத்து அனைவரிடமும் சேர வேண்டும் பத்திரிக்கையாளர்கள் இதை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அமீர் பேசியதாவது…

இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர், நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர். இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

விமல், தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சரவண சக்தி அவர்களின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.

வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும்,ஜீ தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். மேலும், இப்படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் April 21 2023 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here