ஐஸ்வர்யா ராஜேஸ், தீபா, லட்சுமி பிரியா, மைம் கோபி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில், எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில், பாலாஜி சுப்பு விவேக், ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் சொப்பன சுந்தரி. இப்படத்துக்கு அஜ்மல் மற்றும் விஷால் சந்திர சேகர் இசையமைத்துள்ளனர். ப்ளாக் ஹீமர் வகையை சேர்ந்த இப்படத்தை பக்காவாக ப்ரசெண்ட் செய்த இயக்குனர் சார்லஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
படுத்தபடுக்கையாக இருக்கும் அப்பா, திருமணத்துக்கு தயராக இருக்கும் அக்கா, பொறுப்பில்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அண்ணன் என பல்வேறு சுமைகளையும், பொறுப்புக்களையும் சுமக்கும் கதாபாத்திரத்தில், ஜேனரின் வகையை உணர்ந்து கன கச்சிதமாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஸ், இவர் திரைப்பயணத்தில் இருது ஒரு மிக முக்கியமான படம் என்றால் அது மிகையாகாது.
ஒரு நகைக்கடையில் வேலைசெய்யும் ஐஸ்வர்யா ராஜேஸ்-க்கு அதிர்ஷ்ட குலுக்கலில் ஒரு கார் பரிசாக கிடைக்கிறது. அந்த காரை வைத்து தன் அக்கா திருமணத்தை நடத்திவிடலாம் என்று ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் இருக்க, அவரது அண்ணன் கருணாகரன், கார் தனக்குத்தான் சொந்தம் என்று ரகளை செய்ய, விசயம் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்கிறது. அண்ணன், அண்ணனின் உறவுகள், போலீஸ் என பல்வேறு முனை தாக்குதலுக்கிடையே அந்த காருக்குள் ஒரு சடலம் என பரபரப்பாக நடக்கும் சம்பவங்களில் இருந்து ஐஸ்வர்யாவும் அவர் குடும்பமும் எப்படி மீண்டு வந்தது என்பதே சொப்பன சுந்தரி படத்தின் கதை.
திரைக்கதையை, சுவாரஸ்யமான சம்பவங்களோடு பினைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்புக்கு இது மிகச்சிறந்த தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. தீபா வழக்கம் போல சிறப்பாக காமெடி செய்திருக்கிறார். லட்சுமி பிரியா, கிங்கிஸ்லி, மைம் கோபி, சாரா என அனைவரும் சிறப்பாக நடித்து தங்கள் பங்களிப்பை வலுவாக கொடுத்திருக்கின்றனர். அஜ்மலின் பாடல்கள், விஷால் சந்திர சேகரின் பின்னணி இசை என இசையமைப்பு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைதுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்கும்படியான ஜனரஞ்சக படமாக வெளியாகியுள்ளது சொப்பன சுந்தரி
சொப்பன சுந்தரி காமெடி ட்ராவல்