அறிமுகஇயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் திருவின் குரல். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சிண்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வித்தியாசமான த்ரில்லர் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதியின் மிகச்சிறந்த தேர்வுகளில் இப்படமும் ஒன்று என்று சொல்ல்லாம்.
வாய் பேசமுடியாத அருள்நிதிக்கும் ஆத்மிகாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அருள்நிதியின் தந்தையான பாரதிராஜாவுக்கு விபத்து ஏற்பட, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் லிஃப்ட் ஆபரேட்டருக்கும், அருள் நிதிக்கும் உரசல் ஏற்பட, கொலை செய்யத்தயங்காத கொடூர மனம் படைத்த அம்மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கும் அப்பாவி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அருள்நிதிக்கும் நடக்கும் போராட்டம்தான் திருவின் குரல்.
அருள் நிதி ஏற்கனவே பிருந்தாவனம் படத்தில் வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அந்த பாத்திரத்துக்கும், திருவின் குரல் பாத்திரத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது, தன் நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கிறார் அருள் நிதி, நடுத்தர வர்க்க குடும்பத்தலைவன் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பாரதிராஜா, ஆத்மிகா அழகாக இருக்கிறார் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவமனை கடைநிலை ஊழியர்களாக நடித்திருக்கும் நபர்கள் மிரட்டி இருக்கிறார்காள்.
இது போன்ற த்ரில்லர் வகையறா படம் என்றால் சாம் சிஎஸ்க்கு அல்வா சாப்பிடுவது போல, பின்னனி இசையில் மிரட்டி இருக்கிறார். ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலமாக இருக்கிறது.
திருவின் குரல் மிரட்டல்