400 ஆண்டுகளுக்கு மேலாக தென்னகத்தில் ஆட்சி செய்தவர்கள் சோழர்கள். கடல் கடந்து தங்கள் எல்லையை விரியச்செய்தவர்கள். குறிப்பாக தங்கள் ஆட்சிக்காலத்தில் நிர்வாகம், நீர், நில மேலாண்மை, கொடை, கலைகள் என அனைத்து பரிமாணங்களிலும் நேர்த்தியை கடைபிடித்தவர்கள். தொல்குடிகளை சமூக நீரோட்டத்தில் இணைத்தவர்கள்.. அப்படிப்பட்ட சோழர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளிதான் சோழத்துபட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலை.
ஆயிரம் ஆண்டுகளை கடந்து நீடிக்கும் இந்த மர்மத்திற்கு விடை தேடி புதிய தலைமுறை பயணம் மேற்கொண்டது. ஆதித்த கரிகாலன் பிறப்பு தொடங்கி இறப்பு வரை நடந்தவை என்ன? ஆதித்த கரிகாலனை கொன்றதாக யார் யார் மீதெல்லாம் ஐயம் எழுகிறது? அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்ததா?
பொன்னியின் செல்வன் நாவல் சொல்லும் கதையும், ஆதித்த கரிகாலனின் கதையும் ஒன்றா? வரலாற்றை தேடி செய்தியாளர் மணிமாறன் மேற்கொண்ட பயணம்தான் ‘ஆதித்த கரிகாலன் மரணம், மர்மம், மறுபக்கம்.. ‘
அழகிய வரைகலையுடன் நேர்த்தியான வடிவமைப்பில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒவ்வொரு பாகமாக புதியதலைமுறையில் ஒளிபரப்பாகிறது.