Vels University (VISTAS) offers various scholarships schemes for the benefit of eligible students every year which enables them to pursue their dream courses. The notable Scholarship scheme was “Vels Free Education Scheme for Children of Corona Warriors” to honour the relentless services provided by the frontline workers during the COVID pandemic, namely Nurses, Police Personnel and Sanitation workers. 300 free seats have been allotted to the wards of the above personnels at free of cost.

Every year 500 seats are allotted under VSAT (Vels Scholarship Admission Test), based on merit. The students are given scholarships in their tuition fees upto 100%. The other scholarships offered are Merit Scholarship, Alumni Scholarship and Ishari Velan Merit Scholarship

At present, nearly 200 students are given Sports Scholarship in which they are exempted from all fees in addition to providing free accommodation and Food.

In order to honour the services of Ex-servicemen, VISTAS is already providing 10% scholarship in the tuition fees for the wards of Ex-Servicemen.

Now VISTAS has come forward to offer ten free seats with 100% concession in the tuition fees for the wards of Ex-Servicemen, Veer Naris and War Wounded Veterans in order to recognize the selfless dedication for the noble cause of nation building.

The offer letter has been presented to Hon’ble Governor of Tamil Nadu Thiru. R.N. Ravi Avargal by Vice Chancellor of VISTAS Dr. S. Sriman Narayanan in the program “Governor’s Think to Dare” Series- VI, Interaction with the Veterans, Veer Naris and Gallentery Awardees of Award Forces, organized at Raj Bhavan, Chennai today.

Dr. Ishari K. Ganesh
Founder Chancellor – Vels University

வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான மாணவர்களின் நலனுக்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை வழங்கிவருகிறது. இத்தகைய திட்டங்கள் அவர்களின் கனவுப் படிப்புகளைத் தொடர உதவுகிறது. மேலும், வேல்ஸின் குறிப்பிடத்தக்க உதவித்தொகை திட்டங்களான “கொரோனா போர்வீரர்களின் குழந்தைகளுக்கான வேல்ஸ் இலவச கல்வித் திட்டம்” என்பது கோவிட் தொற்றுநோய்களின் போது முன்னணி பணியாளர்கள், அதாவது செவிலியர்கள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்களின் பெரும் பங்களிப்பை பாராட்டி அப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு 300 கல்வி இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் 500 இடங்கள் தகுதியின் அடிப்படையில் VSAT (Vels Scholarship Admission Test) கீழ் ஒதுக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு அவர்களின் கல்விக் கட்டணத்தில் 100% வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மெரிட் உதவித்தொகை, அலுமினி உதவித்தொகை மற்றும் ஐசரி வேலன் மெரிட் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளின் தொடர்ச்சியாக,
தற்போது, கிட்டத்தட்ட 200 மாணவர்களுக்கு விளையாட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது, இதில் அவர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதுடன் அனைத்து கட்டணங்களிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களின் சேவைகளை கௌரவிக்கும் வகையில், வேல்ஸ் பல்கலைக்கழகம் முன்னாள் படைவீரர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 10% உதவித்தொகையை வழங்கி வருகிறது.

இப்போது முன்னாள் ராணுவ வீரர்கள், வீர தீர செயல்புரிந்தோர் மற்றும் போரில் காயமடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தில் 100% சலுகையுடன் பத்து இலவச இடங்களை வழங்க முன்வந்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உன்னத நோக்கத்திற்காக முன்னாள் படைவீரர்கள், வீர் தீரசெயல்புரிந்தோர் மற்றும் போரில் காயமடைந்த வீரர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான கடிதத்தை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களிடம் இன்று சென்னை ராஜ் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆளுநரின் “எண்ணித் துணிக” பகுதி – VI :- படைவீரர்கள், வீர மங்கையர்கள், மற்றும் வீரதீர பதக்கங்கள் பெற்ற முப்படை ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ். ஸ்ரீமன் நாராயணன் அவர்கள் வழங்கினார்.

Dr. ஐசரி K. கணேஷ்
நிறுவனர் – வேந்தர் – வேல்ஸ் பல்கலைக்கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here