புதிய தலைமுறையின் “கற்க கசடற” நிகழ்ச்சி
பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு எந்தப் படிப்பை தேர்ந்ததெடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் மாணவ-மாணவியருக்கு இந்நிகழ்ச்சி வரப்பிரசாதம்.
தங்கள் குழந்தைகளுக்கு எத்தகையை கல்விச் செல்வத்தை கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் பெற்றோருக்கு உரிய விடை இந்நிகழ்ச்சியில் கிடைக்கிறது.
மாணவ-மாணவியர் எங்கு படிக்கலாம்? எந்த துறையை தேர்வு செய்யலாம்? எதிர்காலத்தை திட்டமிட எதுபோன்ற படிப்பு உதவியாக இருக்கும் என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு பிரபல கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் கற்க கசடற நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்குகின்றனர்
இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஏணிப்படியாய் உதவும் இந்த கற்க கசடற” நிகழ்ச்சி புதிய தலைமுறையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இளையோர் தங்கள் எதிர்காலத்தை வளமாய் மாற்ற இந்நிகழ்ச்சி பெரிதும் உதவும் இந்நிகழ்ச்சியை நெறியாளர் ஆனந்தி வழங்க உள்ளீட்டுப்பிரிவின் அருண்குமார் விருந்தினர்களை ஒருங்கிணைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here