குட்டிப்புலி, விருமன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். ஆர்யா, சித்தி இதானி, பிரபு, விவேக் ஓபராய் ஆகியோர் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சித்தி இத்னானியின் சொத்துக்கு ஆசைப்படும் அவருடைய முறைமாமன்கள் அவரை திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கின்றனர், அவர்களுடைய ஆசைக்கு மறுப்பு சொன்ன காரணத்தால், சித்தி இதானியை ஊரை விட்டே தள்ளி வைக்கின்றனர். தனக்கு சொந்தம் என்று இருக்கும் தன்னுடைய அண்ணான் மகளுடன் ஊருக்கு வெளியே வாழ்ந்துவரும் சித்தி இதானி, சிறையில் இருக்கும் ஆர்யாவை சந்திக்க செல்கிறார். அது முடியாத நிலையில், தன்னை தேடிவந்த பெண் யார் என்று தேடிக்கொண்டு வரும் ஆர்யா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? சித்தி இதானி ஏன் ஆர்யாவை தேடி வந்தார்? ஆர்யா சிறையில் அடைபட்ட காரணம் மற்றும் பின்னணி என்ன என்பதை தன்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முத்தையா.
மண்மனம் மாறாமல் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் முத்தையாவுக்கு பாராட்டுக்கள் .ஆர்யாவுக்கேற்ற அதிரடி ஆக்சன் படம் என்று சொல்ல்லாம். படம் முழுக்க சண்டை காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. அடுத்தடுத்து வரும் சண்டை காட்சிகள் துளியும் போரடிக்காமல் இருப்பது மிகப்பெரிய ப்ளஸ். இதற்காகவே சண்டை பயிற்சி இயக்குனருக்கு சிறப்பு பாராட்டுக்களை சொல்லலாம். கன்னக்குழி தெரிய சிரிக்கும் அழகான நாயகி சித்தி இதானிக்கு, டூயட்டுக்கு மட்டும் வரும் வழக்கமான நாயகி பாத்திரம் அல்ல, படத்தையே நகர்த்தும் முக்கிய பாத்திரம், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். பிரபு, ஆடுகளம் நரேன் என படத்தில் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னையிலே பிறந்து வளர்ந்திருந்தாலும், கிராமத்து படங்களுக்கு சிறப்பான இசையை தருவதில் ஜிவி பிரகாஷ் தவறுவதே இல்லை. ஆடுகளம் தொடங்கி, காதர் பாட்சா வரை அதகளம் செய்திருக்கிறார். வேல்ராஜின் கேமிரா புழுதிகாட்டி புகுந்து வருகிறது. சண்டை பயிற்சி, மேமிரா, இசை, எடிட்டிங், சவுண்ட் எஃபெட் என அனைத்து துறைகளும் போட்டி போட்டு வேலை செய்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. அருமையான கிராமத்து பயணமாக அமைதிருக்கிறது காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் – மண்வாசனை