தமிழ் திரையுலகில் எப்போதாவது நிகழும் அதிசயம் என்றால் சூப்பர் ஹீரோ படங்களை சொல்லலாம், அந்த வகையில் தமிழ் திரைவானில் தோன்றிய அதிசய விண்மீன் வீரன். ‘மரகதநாணயம்’ என்ற ஃபேண்டசி திரைப்படத்தை இயக்கிய ஏ.ஆர்,கே சரவணன் அடுத்ததாக இயக்கி இருக்கும் வீரன் படமும் ஃபேண்டசி சூப்பர் ஹீரோ படமாக வெளியகியுள்ளது. இப்படத்தின் நாயகனாக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்க, நாயகியாக அதிராவும், வில்லனாக விநய்யும் நடித்துள்ளனர். முனீஸ் காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இளம் வயதில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆதிக்கு ஸ்பெஷல் பவர் வருகிறது. அதன் பிறகு தன் சொந்த கிராமத்தை விட்டு சிங்கப்புரில் செட்டிலாகும் ஆதி இளைஞனான பிறகு தன் கிராமத்துக்கும், அந்த கிராமத்தில் இருக்கும் வீரன் கோவிலுக்கும் ஆபத்து வரப்போகிறது என்பது கனவில் தெரியவர, ஊருக்கு கிளம்பி வருகிறார். அந்த கிராமத்துக்கும் கோவிலுக்கும் வந்த ஆபத்து என்ன, அதை எப்படி தன்னுடைய ஸ்பெஷல் பவர் மூலம், ஆதி சரி செய்தார் என்பதே வீரன் படத்தின் கதை.
மிகச்சிறந்த திரைக்கதை, காமெடி ட்ரீட்மெண்ட் என தன்னுடைய முத்திரையை இப்படத்திலும் பதித்துள்ளார் இயக்குனர் சரவணன். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை கிராமத்து பின்னணியில் காட்டுவது என்பது சற்றே சவாலான விசயம். அந்த சவாலை சரியான விதத்தில் சமாளித்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற காதாபாத்திரங்கள் என்றால் ஆதிக்கு அல்வா சாப்பிடுவது போல, செம்மையாக நடித்திருகிறார் ஆதி, காமெடி செய்து கொண்டு இளைஞர் பட்டாளத்துடன் சுற்றும்போதும், முண்டாசு கட்டிக்கொண்டு வீரனாக வலம் வரும்போதும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். முனீஸ்காந்த், காளிவெங்கட், யூடியூப் பிரபலம் சசி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சில காட்சிகள் வந்தாலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார் விநய்.
படத்தின் ஹீரோ மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் படத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஃபேன்டசி படங்களுக்கான வண்ணத்தை நம் கண்களில் தூவி இருக்கிறார் மேமிராமேன் தீபக். எடிட்டிங், ஒலிக்கலவை என அனைத்து டெக்னிக்கல் விசயங்களிலும் வீரன் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறது
வீரன் – வெற்றி வீரன்