அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில், பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில், லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் தண்டட்டி படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கிராமத்து கலாச்சாரம், பழக்க வழக்கங்களை வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், இப்படம் நிச்சயமாக இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத ஒரு படைப்பு என்று சொல்லலாம். இதற்காகவே புதுமுக இயக்குனர் ராம் சங்கையாவுக்கு சிறப்பு பாராட்டுக்கள்
கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ரோகிணி திடீரென காணாமல் போக, அவரது மகள்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். விலங்கமான ஊரான அந்த கிராமத்துக்குச் செல்ல போலீசார் தயங்க, அந்த காவல் நிலையத்துக்கு புதிதாக வந்திருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் பசுபதி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் தேடிச்சென்ற ரோகிணி திடீரென இறந்துவிட, அவர் காதில் அணிந்திருக்கும் தண்டட்டியை தட்டிப்பறிக்க
மகள்கள் திட்டம் தீட்ட, அதே நேரம் தண்டட்டி காணாமல் போகிறது. அதன் பிறகு நடக்கும் அதிரி புதிரி கலவரங்களே தண்டட்டி படத்தின் கதை, படம் முழுக்க இருக்கும் நகைச்சுவையை காமெடியை தாண்டி உணர்வுப்பூர்வமான பக்கங்கள் இருப்பது சிறப்பு.
பசுபதியின் நடிப்பை புதிதாக பாராட்ட வேண்டியதில்லை என்றாலும் இந்த கதாபாத்திரத்தை ரசித்து ரசித்து நடித்திருக்கிறார், படம் முழுவதையும் தன்னுடைய உடல்மொழியால் தாங்கி இருக்கிறார். பசுபதிக்கு இணையாக பாராட்டுகளை பெறுகிறார் ரோகிணி, விவேக் பிரசன்னா, தீபா சங்கர் என அனைவரும் கிராமத்து பாத்திரமாகவே மாறி இருக்கின்றனர்
தமிழ்நாட்டின் இண்டீரியர் கிராமத்தின் பசுமை கொஞ்சும் பகுதிகளை மிக மிக எதார்த்தமாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிஅருமையான படல்கள், பின்னணி இசை என அசத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி.
தண்டட்டி: கிராமத்து பயணம்