ஆர்.விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவகுமார், சஞ்சிதா ஆகியோர் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் அழகிய கண்ணே. ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிராமத்தில் கலைசேவை மூலம் சமுக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் லியோ சிவக்குமார் மீது காதல் வயப்படுகிறார் சஞ்சிதா. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று சென்னை வரும் லியோ சிவக்குமார் சஞ்சிதாவை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசிக்க, அவர்கள் குடும்பம் பல்வேறு வழிகளிலும் சோதனைகளை சந்திக்கிறது. சோதனைகளை இவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே அழகிய கண்ணே திரைப்படத்தின் கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை, படத்தின் கதை பல்வேறு தளங்களில் பயணித்தாலும், துளியும் பிசகாத திரைக்கதை ரசிகர்களை படத்துடன் ஒன்றிப்போக வைக்கிறது

நாயகன் லியோ சிவக்குமார் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். உதவி இயக்குனர் எப்படி இருப்பார் என்பதை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் . அதே போல் நாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா தன் கதபாத்திரத்தின் கணத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

அசோக்குமாரின் ஒளிப்பதிவு, கிராமம் தொடங்கி பெருநகரம் வரை அழகியலோடு பயணிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தனின் இசை படத்துக்கு வலு சேர்க்கிறது.

அழகிய கண்ணே: அழகிய அனுபவம்


“AZHAGIYA KANNE”

BANNER : ESTHELL ENTERTAINER
PRODUCER : Dr. S. XAVIER BRITTO

Presented by Kannan Ravi Group

TECHNICIANS

Director : R VIJAY KUMAR
DOP : A.R. ASHOK KUMAR
Music : N.R. RAGUNANTHAN
Editing : E. SANGATHAMILAN
Choreography : I. RADHIKA
Lyrics : VAIRAMUTHU, YUGA BHARATHI, EKADASI
Stunt : Stunt SILVA
Art : VIJAY THENNARASU
Production Manager: ILAYARAJA SELVAM

CAST

SIVA KUMAR (Hero)
SANCHITA SHETTY (Heroine)
PRABHU SOLMON
SINGAM PULI
RAJKAPOOR
AMUDHAVANAN
ANDROOS

CAMEO “VIJAYSETHUPATHI”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here