சுனைனா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, பவா செல்லதுரை, ஆகியோர் நடிப்பில், டொமின் டிசில்வா இயக்கத்தில், யெல்லோ பியர் நிறுவனத்தின் தயாரிப்பில், வெளியாகி இருக்கும் படம் ரெஜினா பவி கே பவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு சதீஸ் நாயர் இசையமைத்துள்ளார்.

இளம் வயதில் சுனைனாவின் தந்தை சிலரால் கொல்லப்பட, வாழ்க்கையே சூனியமாக இருக்கும் ரெஜினாவுக்கு காதல் கணவர் ஆனந்த் நாக் மூலம் மகிழ்ச்சியின் கதவுகள் திறக்கின்றன ஆனால் அவரும் திடீரென கொல்லப்பட மீண்டும் சுனைனாவின் வாழ்வின் புயல் வீசுகிறது.

ஆனந்த் நாக் கொல்லப்பட காரணம் என்ன, கொலைகாரர்கள் யார். அவர்களை எப்படி சுனைனா பழிவாங்கினார் என்பதே ரெஜினா படத்தின் கதை .

பெண் பழிவாங்கும் கதை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் புதுமைகளை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் டொமின் டிசில்வா. அழகான காதல் தேவதையாக வலம் வந்த சுனைனா ஆக்சன் அவதாரம் எடுத்து மிகப்பெரிய வரவேற்பை பெறுகிறார். சுனைனாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஆனந்த் நாக் கவனம் ஈர்க்கிறார். நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர், பவா செல்லதுரை, கஜராஜ், அப்பானி ஷரத் என அனைவரும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

சுரேஷ் நாயரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. யுகபாரதியின் கவிதை வரிகளில் வரும் ’சூறாவளி போல’ மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
பவி கே.பவனின் ஒளிப்பதிவு ஆக்சன் படத்துக்கேற்ப அதகளப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ரெஜினா கலக்கல் ஆக்சன் படமாக வெளியாகியுள்ளது.

ரெஜினா: பூ ஒன்று புயலானது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here