கார் விபத்தில் காலமான தஷி அவர்களின் பேட்டி சுருக்கம்
வாட்டாகுடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம், மட்டுமல்லாது பிற நாட்டு மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளேன். நான் இசை அமைத்து 100 படங்களுக்கு மேல் வெளிவந்து விட்டன.
இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அடங்கும். ஒரு மொழியில் இசை அமைத்திருந்தால் புகழும் பணமும் கிடைத்திருக்கும். நான் பல மொழிகளிலும் கால் பதித்ததனால் பணமும் புகழும் ஒரு சேர எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை.
இன்று வரை பக்தி மனம் கமழும் பாடல்கள் கொண்ட 2000 இசைத்தட்டுக்கள் (2000 ஆல்பம்) வெளியாகி உள்ளன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், என்னுடைய பின்னணி இசை சேர்ப்பு தான். நான் மார்கிங்கில் மன்னன் என்று பெயர் பெற்றுள்ளேன்.
நான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் ஷியாம்,ரவீந்திரன் மாஸ்டரில் இருந்து தொடங்கி, சலீல் சவுத்ரி, பரத்வாஜ் வரை எல்லாருமே இதை ஒப்புக் கொள்வார்கள். சுமார் 90 புது பாடகர்கள் (ஆண்,பெண் ) மற்றும் 160 கவிஞர்களை இந்த இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளேன்,