சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை!


OTT
சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை… பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈட்டித் தரக்கூடிய வியாபார விளம்பரங்களையோ, யுத்திகளையோ அவர்கள் கையாள்வதில்லை. காரணம், இலவசமாக கிடைக்கக்கூடிய ஒரு பங்கு சதவீத படங்கள். அதையும் மீறி சிபாரிசுகளுக்கு பின், ஒரு சில சிறிய திரைப்படங்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அதன் உண்மை நிலைமை, அந்த படத்தின் மொத்த உரிமையும் எக்ஸ்க்ளுசிவ் என்ற பெயரில் வாங்கப்படுகிறது.

வருத்தத்திற்குரிய செய்தி… அந்த படங்களின் மொத்த உரிமையும், மொத்த பட்ஜெட்டில் 40% மட்டுமே விலை கொடுத்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. காரணம், தயாரிப்பாளர் தான் போட்ட முதலை எப்படி ஈட்டெடுப்பது என்று தெரியாத ஒரு சூழலில், வந்தவரை போதும் ஓரளவு காப்பாற்றப்படுவோம் என்று நினைத்து, வேறு நிலை இல்லாத சூழ்நிலையில் அந்த படங்கள் கொடுக்கப்படுகிறது.

சாட்டிலைட் உரிமை
இதுவும் விதி விலக்கல்ல… தனியார் சேனல்கள், பெரிய நடிகர்களின் படங்கள்… குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிகர்களின் படங்கள்… பெரிய நிறுவனங்களின் படங்கள்… இவை மட்டுமே வியாபாரமாகிறது என்று சொல்லப்படுகிறது. அதையும் மீறி பல சிபாரிசுகளுக்கு பிறகு, ஏதேனும் ஒரு சிறு படம் வாங்கப்பட்டால் அதன் மொத்த உரிமையும் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 10% மட்டுமே கொடுக்கப்பட்டு, எக்ஸ்க்ளுசிவ் ரைட்ஸாக திரையரங்கு வெளியீட்டை தவிர அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்ற அவலநிலைதான் உள்ளது.

திரையரங்குகள்
கடந்த காலங்களிலும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி… கடந்த காலத்தைவிட வரும் காலம் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து. அவர்களுடைய படத்தை வெளியிடும்போது காட்சிகள் பெறுவதே மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையைத்தான் சந்திக்கப் போகின்ற ஒரு சூழலாக அமையும் எனத் தெரிகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், நான் எனது சொந்த OTT தளத்தை உருவாக்கி உள்ளேன். அந்த தளத்தில் வரும் 28ம் தேதி ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை நேரடியாக உலகெங்கும் திரையிடுகிறேன். எனக்கு நன்றாகவே தெரியும் கிட்டதட்ட வட்டி இல்லாமல் நான்கு கோடி ரூபாய் அசல் உள்ள இந்த படத்தை இப்படி ஒரு பெரிய ரிஸ்க் எடுத்துக் கொண்டு, முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கையிலும் மீட்டு எடுப்போம் என்று நம்பிக்கையிலும் JSK Prime Media என்ற OTT தளத்தில் திரையிடுகிறேன்.

நண்பர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குமாறும், வரும் காலத்தில் இந்த தளத்தை ஒரு வெற்றிகரமான தளமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வளவு முதல் கொண்ட ஒரு திரைப்படத்தை திரையிடுகிறேன். இந்த தளத்தின் வெற்றி, வரும் நாட்களில் அனைவருக்கும் பயனுள்ள ஒரு சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் JSK Prime Media என்ற OTT தளத்தை உருவாக்கி உள்ளேன். என்னை அடையாளம் கண்டு அங்கீரித்து பெயர் வாங்கி கொடுத்த திரையுலகிற்காக இன்று நான் விதைக்கும் விதை வருங்காலத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. தங்களது முழு ஆதரவை வழங்கி வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் JSK Prime Media App-யை டவுன்லோடு செய்து ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவளித்து வலுசேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ‘அண்டாவ காணோம்’ உங்கள் அனைவரையும் நிச்சயமாக சிரித்து மகிழ வைக்கும். தரமான படமாக இருக்கும்.

OTT தளத்தில் கோலோச்சி இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சாமானியனாக பயணிக்க முடிவுசெய்துள்ளேன். அதில் வெற்றியும் பெறுவேன் என்று மனதார நம்புகிறேன்.
உங்கள் ஆதரவை எதிர்நோக்கி…
அன்புடன்
JSK சதீஷ்குமார்

JSK Prime Media App – ன் சிறப்பம்சங்கள்:

IOS, Android, Fire Stick, Smart Tv, Web Browser போன்ற‌வ‌ற்றில் எளிமையான‌ முறையில் பதிவிறக்கம் செய்யும் வ‌கையில் அறிமுக‌மாகிற‌து.

JSK Prime Media App – யை பதிவிறக்கம் (Download) செய்து தங்களது விபரங்களை பதிவு (Sign Up) செய்தப் பின் Sign In செய்து உங்களுக்கு பிடித்தமான படங்களை கண்டு மகிழுங்கள்.

ஷிவீரீஸீ மிஸீ செய்த உடன் சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி எப்போதும் கண்டுகளிக்கும் வ‌கையில் 50 திரைப்ப‌ட‌ங்களை இல‌வ‌ச‌மாக‌ காணலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த 50 படங்களுக்கு பதிலாக வேறு 50 படங்கள் சுழற்சி முறையில் புதிதாக மாற்றப்படும்.

புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்கள் எக்ஸ்க்ளுசிவ் ஆக வெளியிடப்படும். புதியதாக வெளியிடும் திரைப்படங்களுக்கு அந்தந்த திரைப்படங்களின் தன்மைக்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

அந்த வகையில் முத‌லாவ‌தாகJSK FILM CORPORATION தயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குனர் சி.வேல்ம‌தி இய‌க்க‌த்தில் ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வரும் ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்படுகிறது. ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை ரூ.100 மட்டுமே செலுத்தி எக்ஸ்க்ளுசிவ் – ஆக குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். நிச்சயமாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும்.

இந்த படத்தை தொடர்ந்து வரும் நாட்களில் புத்தம் புதிய எக்ஸ்க்ளுசிவ் திரைப்படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here