ஜூலை 29ஆம் தேதி தனியார் டிவி ஒன்றின் ரியாலிட்டி ஷோ சென்றதின் மூலம் தான் SPB அவர்களுக்கு வைரஸ் தொற்று , அதில் கலந்துகொண்ட பலருக்கும் நோய் தொற்று : செய்தி ..
5 மாதம் பத்திரமாக வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு வந்த நிலைமை ,சிம்பிள் SPB sir தன் வயதை கருத்தில் கொண்டாவது இந்த நிகழ்ச்சியினை தவிர்த்திருக்கலாம் ..
மத்திய அரசு திரும்பி திரும்பி சொல்வது இதுதான் ,வயதில் மூத்தவர்கள் முடிந்தவரை வெளியே வருவதை தவிர்த்து விடுங்கள் என்று ..
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ஒருவரின் குடும்பம் முழுவதுவும் இப்போது மருத்துவமனையில் என்று சொல்கிறார்கள் ..
ஆவணி பிறந்ததும் மூகூர்த்தம் / சுபகாரியங்கள் தொடங்கி உள்ளது ..
காலனியில் கண்ணால் பார்த்தது , நேற்று ஒரு வீட்டில் காது குத்து நிகழ்ச்சி , உணவு பரிமார ஒரு சிறிய பார்க் போன்ற இடத்தில் ஏற்பாடு ,முந்திய இரவே வந்து தங்கிய கேட்டரிங் டீம் ..
ஒரு பயலும் முக கவசம் அணிய வில்லை ,காலையில் பொது வழியில் இருமி துப்பி கொண்டு இருந்தார்கள் ,சத்தம் போட்ட பிறகு ரெஸ்ட் ரூம் போனார்கள் ..
அவர்களே தான் பரிமாரி இருப்பார்கள் , விழாவில் பலர் பெரியவர்களும் கலந்து கொண்டார்கள் ..
இதற்கு யார் பொறுப்பு ?
சற்றும் நிலைமையை யோசிக்காமல் நடந்து கொண்டு இருக்கும் மாக்கள் ..
பொது நிகழ்ச்சிகளில் இன்றைய நிலைமையில் முடிந்த வரை போகாமல் தவிர்ப்பது நல்லது ..
மேலும் கூப்பிட்டு வரவில்லையே என்று கோபிக்காமல் இருப்பதும் உத்தமம் ..
நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்….ரமேஷ் கண்ணா