தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டத்தில் உள்ள திருமலாபுரம் ஊராட்சியில் நேற்று (12/09/2023) நடைபெற்ற மக்கள் களம் மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ஊர் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து, மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த மக்கள் களம் நிகழ்ச்சியில், திருமலாபுரம் கிராமத்தை சார்ந்த அய்யம்மாள் என்கின்ற மூதாட்டி,தனக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதால் அதிற்கான கருவி வழங்க மனு கொடுத்து,கோரிக்கை வைத்தார். அப்போது, மக்கள் களம் நிகழ்ச்சியில், அரசு துறை சார்ந்த அலுவலர்களும், மருத்துவ துறை சார்ந்தவர்களும் பங்கேற்றனர். அங்கு, இருந்த கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இருந்தனர், மூதாட்டியின் கோரிக்கை நிறைவேற்றுமாறு கனிமொழி எம்.பி கூறினார்.
அதனைத் தொடர்ந்து இன்று (13/09/2023) பரிசீலித்த கனிமொழி எம்.பி மக்களை தேடி மருத்துவம் குழுவினை அழைத்து காதொலி கருவி கிடைக்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார். அய்யம்மாள் மக்களை தேடி மருத்துவம் குழுவினரால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் நல்த்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து உரிய ஆவணங்களை அளித்து காதொலி கருவி வாங்கி இயன்முறை மருத்துவர் கல்பனா அவர்களால் வழங்கப்பட்டது.
கருவி பொருத்திய பிறகு செவி நன்றாக கேட்பதாக தெரிவித்து, மகிழ்ச்சியில் சிறிது நேரம் மருத்துவரிடம் உரையாடினார்.